BJP Leader Nainar Nagendran criticized DMK rule "Law and order have completely deteriorated" google
தமிழ்நாடு

திமுக ஆட்சியில் "சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துள்ளது" : நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

BJP Leader Nainar Nagendran criticized DMK Rule : திமுக ஆட்சியில் நடந்த குற்ற சம்பவங்களை முன்னிறுத்தி தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Rohini

கண்டன ஆர்ப்பாட்டம்

BJP Leader Nainar Nagendran criticized DMK Rule : திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, பாலியல் குற்றங்கள் ,பாதிக்கப்பட்டதாக கூறி, தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மதுரையில் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது. குறிப்பாக இதுவரை திமுக ஆட்சியில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள், பாலியல் குற்றங்கள், கொலை ,கொள்ளை , போதை புழக்கம் அகையவற்றில் பாதுக்காப்பு இல்லை என கூறி ஆர்பாட்டமானது நடைபெற்றது

நீதிபதிகளுக்கு பாதுகாப்பில்லை

நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன மண் மதுரை மண். ஆனால் இன்று நீதியரசர்கள் தாக்கப்படுகிறார்கள். உதயநிதியை முதலமைச்சர் ஆக வேண்டும் என ஐந்து ஆண்டுகளாக முயற்சி நடந்து வருகிறது.

மாணவர்கள் கையில் கஞ்சா

கையில் புத்தகத்தை வைக்க வேண்டிய மாணவர்கள் இன்று கையில் கஞ்சாவை வைத்துள்ளார்கள். டாஸ்மாக்கில் கொள்ளை, மணலில் கொள்ளை, இதன் மூலம் திமுக குடும்பம் மட்டும் 50 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளது.

மேலும் படிக்க : NDA ஆர்ப்பாட்டம் : ”திமுக ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள்” : எடப்பாடி பழனிசாமி உறுதி

தீபம் ஏற்ற வேண்டுமென நீதி அரசர் கூறுகிறார். ஆனால் திமுக அரசு தீபம் ஏற்ற முடியாது என மறுக்கிறது ஏன்டா திமுக ஆட்சியில் நடந்த குற்ற சம்பவங்களை கடுமையாக சாடியுள்ளார்

திமுகவை தோற்கடிக்க வேண்டும்

தொடர்ந்து பேசிய அவர் காவல்துறை தமிழக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கு முழுவதும் கெட்டுப் போய்விட்டது. நீதி வெல்ல வேண்டும் திமுக அரசை தோற்கடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.