எம். ஆர். ராதா மனைவி கீதா மறைவு :
Nainar Nagendran Tribute to Actress Radhika's Mother : நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகர் ராதா ரவி மற்றும் நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக(Geetha Death) காலமானார்.
போயஸ் கார்டனில் அஞ்சலி :
இந்த நிலையில், கீதா அவர்களின் உடல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகை ராதிகாவின் இல்லத்தில் பொது அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து ராதிகாவின் இல்லத்திற்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கீதா ராதாவின் திருவுருபடத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் படிக்க : மத்திய அரசு திட்டங்களை வரவேற்க மனமில்லை : ஸ்டாலின் மீது பாய்ச்சல்
நயினார் நாகேந்திரன் இரங்கல் :
இதனைதொடர்ந்து நடிகை ராதிகா மற்றும் சரத்குமாருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran) ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து ஆறுதல் கூறினார்.