நயினார் நாகேந்திரன் தொடர் பதிவு
Nainar Nagendran on DMK Election Promises : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசை கண்டித்தும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றததையும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களிலும், செய்தியாரள்கள் சந்திப்பிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பி, திமுக குறித்து விமர்சித்தும் வருகிறார். மேலும், தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்று தமிழகம் முழுவதும் சென்று மாவட்ட வாரியாக மக்களை நேரில் சந்தித்து குறைகளையும் கேட்டறிந்தும் வருகிறார்.
நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு
இதன் தொடர்ச்சியாக சொன்னீங்களே செஞ்சீங்களே என்ற ஹேஷ்டேக்குடன் வளர்ச்சி அரசியலை முன்னெடுத்துள்ளதாக மேடைதோறும் பெருமை பேசும் நீங்கள் மதுரைக்காக முன்னெடுத்தது என்ன என்று தனது எக்ஸ் வலைதளத்தில் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கொடுத்த வாக்குறுதிப்படி வேளாண் பல்கலைக்கழகம் அமைக்காதது, மாற்றாந்தாய் மனப்பான்மையில் தப்பும் தவறுமாகத் திட்ட அறிக்கை தயாரித்து மெட்ரோ திட்டத்தைத் தாமதமாக்கியது என மதுரையின் வளர்ச்சியைக் காவு வாங்கியது @arivalayam அரசின் திறனற்ற நிர்வாகமே என்பதை மதுரை மக்கள் நன்கறிவர் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்
மேலும், திமுக அமைச்சர்களின் கோஷ்டி சண்டையில் இந்தியாவிலேயே அசுத்தமான நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்குமளவிற்கு மதுரையை நாறடித்தது போதாதென்று, ரூ.150 கோடி வரை மாநகராட்சி வரியில் முறைகேடு செய்து மதுரையின் வளத்தையும் சுரண்டிய திமுக அரசை மதுரை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்று விமர்சித்துள்ளார்.
திமுக அரசை வரும் தேர்தலில் மதுரை மக்கள் தூக்கி எறிவார்கள்
இதைத்தொடர்ந்து கொடுத்த வாக்குறுதிகளையும் மக்களின் வளர்ச்சியையும் மறந்து, சொந்த வாரிசுகளின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் @arivalayam அஅரசை வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரை மக்கள் தூக்கியெறிவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள போஸ்டரை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.