Nainar Nagendran Slams CM MK Stalin on Central Government Schemes 
தமிழ்நாடு

மத்திய அரசு திட்டங்களை வரவேற்க மனமில்லை : ஸ்டாலின் மீது பாய்ச்சல்

Nainar Nagendran Slams CM MK Stalin : மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் வரவேற்பதில்லை என, நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.

Kannan

ரேஷன் பொருட்களை தருவது மத்திய அரசு :

Nainar Nagendran Slams CM MK Stalin : சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “ மத்திய அரசின் மக்கள் விரோத திட்டம் என்ன என்பதை முதல்வர் ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும். மக்களுக்கு அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை இலவசமாக கொடுக்கிறோம். அத்தனையும் மத்திய அரசு தரும் பொருட்கள்.அதில் மாநில அரசின் பங்கு ஒன்றுமே கிடையாது. அது மக்கள் விரோதமா?

விவசாயிகளுக்கு திமுக பெரும் துரோகம் :

விவசாயிகளுக்கு வருடத்திற்கு 4 தடவையாக ரூ.6000 தருகிறோம். அதுவும் மக்கள்(PM Kisan Scheme) விரோத திட்டமா? பிரதமர் மோடி அரசின் வீடு கட்டும் திட்டத்தில் மாநில அரசின் பங்கு இருக்கிறது. அதை மறுக்க முடியாது.

அதிலும் 37 லட்சம் பேருக்கு கொடுத்துக் கொண்டு இருந்தனர். மத்திய அரசு பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக இப்போது கட்டுப்பாட்டில் வைத்து, அதை 19, 20 லட்சமாக குறைத்திருக்கின்றனர். இது விவசாயிகளுக்கு தமிழக அரசு செய்யும் மிகப் பெரிய துரோகம். அதை மறுக்க முடியாது.

வரவேற்க மனம் இல்லாத ஸ்டாலின் :

மக்கள் விரோத திட்டம் என்று சொல்கிறீர்களே? இதில் எந்த திட்டம் அப்படிப்பட்டது என்பதை முதல்வரிடம் நீங்கள் போய் கேட்கணும். எந்த மத்திய அரசின் திட்டத்தையும் முதல்வர் வரவேற்று பேசி உள்ளாரா? இதுவரைக்கும் கிடையாது. ஜிஎஸ்டி வரிகுறைப்பில், எல்லா வரியிலும் தமிழகத்துக்கு 50 சதவீதம் பங்கு இருக்கிறது. பாதிப்பு என்று கூறுவது தவறு. ஜிஎஸ்டியில் மத்திய அரசின் நேரடி வரிவிதிப்பு எதுவும் கிடையாது. எல்லா மாநில நிதியமைச்சர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களின் ஒப்புதலோடு தான் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது.

வரி குறைப்பால் மக்களுக்கு கூடுதல் நன்மை :

ஜிஎஸ்டியில் 28 சதவீத வரி விதிப்பு எடுக்கப்பட்டு விட்டது. 12 சதவீதத்தில் கிட்டத்தட்ட 90 பொருட்களின் விலையை 5 சதவீதமாக குறைத்து விட்டனர். சில பொருட்களுக்கு வரியை ஜீரோ சதவீதமாக குறைத்து விட்டனர். இதில் மக்களுக்கு நன்மை இருக்கிறதா? இல்லையா? இதை எல்லாம் முதல்வர் தெரிந்து கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 50 சதவீதம் மாநில அரசுக்கு பங்கு இருக்கிறது. மீதி இருப்பதில் தான் சாலை போட வேண்டும். இன்றைக்கு நான்குவழி, எட்டு வழி சாலை யார் போடுகின்றனர்? மத்திய அரசு தான் இந்த திட்டங்களை மேற்கொள்கிறது.

மேலும் படிக்க : ’சாராயம் விற்பது தான் திமுக இளைஞரணி கோட்பாடா’ ? : நயினார் விளாசல்

மக்கள் விரோத திமுக அரசு :

தமிழகத்தை பொறுத்த வரை திமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வருவதில்லை. உதாரணமாக ஜிஎஸ்டியில் எல்லாவற்றையும் விலை குறைத்தோம்.ஆனால் ஆவினில் அவர்களால் விலையை குறைக்க முடியவில்லை. போராட்டம் என்று சொன்னவுடன் விலையை குறைத்தார்கள்” இவ்வாறு நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran) கருத்து தெரிவித்தார்.

=================