BJP Leader Nainar Nagendran strongly criticized DMK government And TRB Raja News in Tamil 
தமிழ்நாடு

திமுக ஆட்சியே ’வெற்றுக் காகிதம்’ : அடித்துச் சொல்லும் நயினார்

Nainar Nagendran Criticized DMK Government : திமுக ஆட்சியே ஒரு வெற்றுக் காகிதம் தான் என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடி இருக்கிறார்.

Kannan

Nainar Nagendran Criticized DMK Government : தமிழக அரசின் நிதி நிலைமை, வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு பற்றி எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்டு வருகின்றன. இந்தநிலையில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஒரு வெற்றுக் காகிதத்தை காண்பித்து, இது தான் வெள்ளை அறிக்கை என்று கூறி இருந்தார்.

கல்வியில் பின்தங்கிய தமிழகம் :

இதுபற்றி, நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து விட்டது. கம்பன் பிறந்த தமிழகம் இன்று கல்வியில் பின்தங்கி இருக்கிறது. கல்வித்தரம் வீழ்ச்சியடைந்து விட்டது. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து, சுய விளம்பரத்திற்காக அரசு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

விளம்பரம் தேடும் திமுக அரசு :

மாணவர்கள் புத்தகப் பையில் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அவலச் சூழல் நிலவுகிறது. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்க, உயர்கல்வியில் சில இடங்களை மட்டும் நிரப்பிவிட்டு, நடிகர்களை அழைத்து வந்து அரசு விளம்பரம் தேடுகிறது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்ததாகக் கூறுகிறார்.

வெற்றுக் காகிதம் தான் திமுக அரசு :

இது குறித்து நான் தொடர்ந்து வெள்ளை அறிக்கை கேட்டு வருகிறேன். இதுவரை பதில் இல்லை. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஒரு வெற்று காகிதத்தைக் காட்டி, இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். அவரிடம் இருந்தது வெற்று காகிதம்; அதுபோலவே இந்த அரசும் ஒரு வெற்று காகிதம்தான். இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும்.

திமுகவுக்கு வாக்குகள் கிடைக்காது :

மக்கள் திமுக வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் திமுகவுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள். நானும் சி.வி. சண்முகமும் சந்தித்தது ஒரு சிறப்பு வாய்ந்த சந்திப்பாக இருக்கும். டிசம்பரில் அதற்கான முடிவு தெரியும். கூட்டணியை மட்டும் வைத்து மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள்.

மேலும் படிக்க : ’கல்வித்துறையை காவு கொடுக்கும் திமுக அரசு’ : நயினார் கண்டனம்

அக்டோபர் 15 முதல் மக்கள் சந்திப்பு :

அக்டோபர் 12ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மதுரையில் இருந்து மக்கள் சந்திப்பு பயணத்தை(BJP Campaign Date in Tamil Nadu) தொடங்குகிறோம். முதல் நிகழ்ச்சியில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொள்கிறார்” என்று நயினார் நாகந்திரன்(Nainar Nagendran) பேட்டியளித்தார்.

====================