BJP Total MLA in India : இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தியா முழுவதையும் கணக்கிட்டுப் பார்க்கும்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்கும் கட்சியாக, அசைக்க முடியாத ஒன்றாக பாஜக உருவெடுத்து வருகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலம் முதல் இந்தியா காங்கிரஸால் ஆளப்பட்டாலும், இப்போதைய நிலையை பார்த்தால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிலமை பெரும் அகழபாதாளத்தில்தான் தவழ்ந்து வருகிறது.
பெரும் வளர்ச்சியில் பாஜக
நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என நேருவின் பரம்பரையும், அவர்களது ஆதரவுடன் பிரதமர் இருக்கையில் அமர்ந்தவர்களுமே அதிகம். ஆனால், 1980ல் பாஜக உருவான பிறகு கட்சி தொடங்கிய சில வருடங்கள் அதன் வளர்ச்சி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. ஆனால், இன்று வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் பாஜக-வின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால் தவிர்க்க முடியாதா ஒன்றே.
15 மாநிலங்களுடன் சிம்மாசனத்தில் பாஜக
அதாவது, தற்போதைய நிலவரப்படி நாட்டில் 15 மாநிலங்களில் பாஜக நேரடியாக ஆட்சி செய்து வருகிறது. 6 மாநிலங்களில் ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறது. முன்னரே பாஜகவின் ஆட்சி செழித்தோங்கியுள்ள நிலையில், தற்போது பிஹார் வெற்றி அதனை மெரூகேற்றி பாஜகவை சிம்மாசனத்தில் அமர்த்தியுள்ளது.
அதாவது, அந்த மாநிலத்தில் ஜனதா தளம் கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக அவர்களுக்கு நிகராக 101 தொகுதிகளில் போட்டியிட்டு ஜனதா தளத்தை காட்டிலும் அதிக தொகுதிகள் வெற்றி பெற்று பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
1654 எம்.எல்.ஏ.க்கள்:
பீகார் மாநில வெற்றிக்கு பிறகு நாட்டில் பாஜக எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை மட்டுமே 1654-ஆக அதிகரித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 258 எம்.எல்.ஏ.க்களை தன்வசம் வைத்துள்ளனர்.
உத்தரபிரதேசம் - 258
மத்திய பிரதேசம் - 165
குஜராத் - 162
மகாராஷ்ட்ரா - 131
ராஜஸ்தான் - 118
ஒடிசா - 79
மேற்கு வங்கம் - 65
கர்நாடகா - 63
ஆகிய மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அதிக எம்எல்ஏக்கள் கொண்ட கட்சி:
தென்னிந்தியா மட்டுமே தற்போது பாஜக-விற்கு சவாலாக இருந்து வரும் நிலையில், இங்கு இன்றளவும் கூட்டணி குறித்த ஐயம் பாஜகவுடன் இருந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தில் புதிய கட்சிகள் மற்றும் அரசியல் நகர்வுகள் தலைதூக்கியுள்ளதால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை அரசியல் ரீதியாக தங்களது முத்திரையை பதித்துள்ள பாஜக, தமிழகத்தில் கூட்டணியை யாருடன் வைத்து தமிழக சட்டமன்ற தேர்தலை எப்படி நகர்த்தும் என்று பார்ப்போம். மத்தியில் ஆளும் பாஜக இன்றைய நிலவரப்படி நாட்டிலே அதிக எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள கட்சியாக தனித்து ஜொலிக்கிறது.
தொடர் பலவீனத்தில் காங்கிரஸ்
பாஜக-விற்கு நேரடி போட்டியாக கருதப்படும் காங்கிரஸ் கட்சி பலவீனமாகவே ஒவ்வொரு தேர்தலிலும் மாறி வருகிறது. பணமதிப்பிழப்பு காரணமாக மோடி மீதும் பாஜக ஆட்சி மீதும் அதிருப்தி ஏற்பட்ட பிறகும் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பை கடந்த முறைக்கு முந்தைய லோக்சபா தேர்தலில் இழந்தது. அடுத்தடுத்து 3 தேர்தலில் பாஜக-விடம் ஆட்சியை காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது. அதற்கு காரணம் கூட்டணி ஒற்றுமையின்மை, பிரதமர் வேட்பாளர் யார்? என்ற போட்டி உள்ளிட்ட பல காரணங்களே ஆகும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
அடுத்தடுத்து இலக்கு:
வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜக-வின் அடுத்த இலக்காக மேற்கு வங்கம் உள்ளது. தற்பொழுது எஸ்.ஐ. ஆர் பணிகள் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் பதட்டமும் பலவீனமாக காட்சியளிக்கும் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை தருகிறது. இதனால், பல்வேறு காரணங்களை காட்டி தமிழகம் மட்டுமல்லாது தேசிய கட்சிகளும் எஸ். ஐ. ஆர்-யை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி அங்கு ஆட்சியில் அமர பாஜக மும்முரமாக செயல்பட்டு வருகிறது.அதேபோல, பாஜக-விற்கு மிகப்பெரிய சிம்மசொப்பனமாக திகழும் தமிழ்நாட்டிலும் தங்களது கால்தடத்தை பதிக்க பாஜக ஆர்வம் காட்டி வரும் நிலையில், வரும் தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து தன்னை நிலைநிறுத்தும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.