தமிழக பட்ஜெட் 2026-27 , சமூகநலத்துறைக்கு ரூ. 3,937 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் தவெக பொறுப்பேற்ற பிறகு ,முதல் பட்ஜெட் தாக்கலானது நடைப்பெற்று வரும் நிலையில் ,அதில் சமூக நலத்துறைக்கென்று ரூ. 3,937 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்
பட்ஜெட்டில் இடம்பெற்ற பெண்கள் நலன் குறித்த அறிவிப்புகள்
தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பாக , தேர்தல் பிரச்சாரத்தின் போதே , பெண்கள் மற்ரும் பெண் குழந்தைகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார் ,
அந்த நிலையில் , தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பெரும்பான்மையான வாக்குகளை பெற்று , ஆட்சி அமைத்த நிலையில் , முதற்கட்டமாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையானது உருவாக்கப்பட்டது ,
இந்த நிலையில் முதல் ப்டஜெட்டில் பெண்களின் நலனுக்கென்று சிறப்பு நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அதனடிப்படையில் திருநங்கைகள் வசதிக்காக 5 மாவட்டங்களில் அரண் தங்குமிடங்கள்
முதியோர் நலனுக்காக 1,000 நடமாடும் மருத்துவ மையங்கள்
பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம், பட்டுச்சேலை வழங்கும் அண்ணன் சீர் திட்டம், ரூ.812 கோடி ஒதுக்கீடு
பழங்குடியின பெண்கள் நலனுக்கென்று ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அனைவருக்கும் சமவாய்ப்பு திட்டம் ரூ.462.41 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மேலும் பெண்களின் திருமணத்திற்கு பட்டுசேலை மற்றும் , பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கும் தனியாக நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
=======================