மேகேதாட்டு அணை விவகாரம்
மேகேதாட்டு அணை விவகாரம் தோடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
முதல்வரின் தனித் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”நீண்ட மற்றும் நெடிய சட்டப் போராட்டத்தை நடத்தியே காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை பெற்றுள்ளோம்.
அணை கட்டும் முயற்சியை தடுத்தோம்
காவிரி விவகாரத்தில் நமது உரிமை நிலைநாட்டப்பட்டது திமுக அரசினாலேயே என்பதை இங்குள்ள மூத்த உறுப்பினர்கள் அறிவார்கள். மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியை அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக கடுமையாக எதிர்த்தார்.
கூட்டணி பற்றி கவலைப்படவில்லை
எங்கள் கூட்டணி கட்சி கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த போதும் கூட, அதனை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான் நாங்கள் அணை கட்டுவதை எதிர்த்தோம்.
திமுக தனித் தீர்மானம் கொண்டு வந்தது
அணை திட்டத்திற்காக ரூ.1000 கோடி கர்நாடக அரசு ஒதுக்கியதைக் கண்டித்து, இதே அவையில் தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு. அரசின் தனித் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
உரியநீரை பெற நடவடிக்கை தேவை
மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படவில்லை. அடுத்த காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உறுதியாகப் பேசி, நமக்கான நீர் பங்கீட்டை பெற வேண்டும்.
பிரதமரை சந்தித்து கோரிக்கை
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழுவினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த தனித் தீர்மானத்தை பிரதமரிடம் சென்று வழங்க வேண்டும்.
தனி நடுவர் மன்றம்
’’காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தோடு, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தனி நடுவர் மன்றத்தை உருவாக்க வேண்டும்’’ என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கோரிக்கை விடுத்தார்.
முதல்வர் பதில் - உறுதி
இந்த கோரிக்கைக்கு பதில் தெரிவித்த முதல்வர், எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு தீர்மானத்தில் திருத்தும் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.
அனைத்து கட்சிகளுக்கும் நன்றி
தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், ’’தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.
நிறைவேறியது தனித் தீர்மானம்
இதைத்தொடர்ந்து முதல்வர் தெரிவித்த திருத்தங்களோடு, தீர்மானம் பேரவையில் முழுமையாக நிறைவேற்றப்படுவதாக, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
==================