A case has been registered against DMK MP A. Raja and former Minister Sekar Babu regarding controversial remarks made about the Chief Minister and a Minister.
சைதாப்பேட்டை போராட்டத்தில் ஆ. ராசா
தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கடந்த வாரம் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் பற்றி சர்ச்சை பேச்சு
அப்போது அமைச்சர் நிர்மல் குமார் பற்றி ஆ.ராசா சர்ச்சையாக பேசியது அரசியல் வட்டாரங்களில் கண்டிக்கப்பட்டது.
ஆ. ராசா மீது புகார்
இதுபற்றி தமிழ்நாடு முழுவதும் ஆ. ராசா மீது புகார்கள் எழுந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு
தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஆ.ராசா மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சேகர் பாபு மீதும் வழக்கு
இதேபோல், முதலமைச்சர் குறித்து பொதுவாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
12ஆம் தேதி திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சேகர்பாபு முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியது, ஆபாசமாக பேசுதல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
======================