Case registered against three police personl, connection with police firing on farmer in Tenkasi district google
தமிழ்நாடு

”கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கிச் சூடு” : ஆலங்குளத்தில் நடந்தது என்ன? : காவலர்கள் மீது வழக்குப்பதிவு!

தென்காசி மாவட்டத்தில் கள் இறக்கச் சென்ற விவசாயி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Kannan

கள் இறக்கும் தொழிலாளி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் சேட். இவரது மகன் 32 வயதான மணிகண்டன்.

விவசாயியான இவர் பனையேறும் தொழிலாளியாகவும் உள்ளார். ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு மருதம்புத்தூர் பகுதியில் கள் விற்பனை செய்வதாக புகார் வந்தது.

போலீசார் சோதனை

அதன்பேரில் எஸ்.ஐ இசக்கி ராஜா மற்றும் 2 போலீசார் மருதம்புத்தூர் காட்டுப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஒரு பனைமரத்தில் பதநீர் எடுப்பதற்காக பானை வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த போலீசார், மரத்தின் உரிமையாளரான மணிகண்டனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

பின்னர், மணிகண்டன், அவரது தந்தை ஆகியோரை அழைத்து கொண்டு பனைமரம் இருக்கும் பகுதிக்கு சென்றனர். இதை பார்த்த அவர்களின் உறவினர்களும் அங்கு திரண்டு வந்தனர். மணிகண்டனை பனை மரத்தின் மீது ஏறி பானையை எடுக்க போலீசார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

எஸ்ஐ மீது தாக்குதல்

இதையடுத்து அவர் மரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சிலரை போலீசார் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதை கண்ட மணிகண்டன், எஸ்.ஐ இசக்கி ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. தள்ளுமுள்ளுவில் எஸ்.ஐ இசக்கி ராஜா தலையில் கட்டையால் அடி விழுந்து ரத்தம் கொட்டியது.

விவசாயி மீது துப்பாக்கிச் சூடு

உடனே எஸ்.ஐ இசக்கி ராஜா வைத்திருந்து துப்பாக்கியால் மணிகண்டனை நோக்கி சுட்டுள்ளார். இதில் 2 குண்டுகள் அவரது கால்களில் பட்டு படுகாயமடைந்தார்.

இதையடுத்து சக போலீசார் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உறவினர்கள் சாலை மறியல்

இந்தநிலையில், மணிகண்டனின் உறவினர்கள் ஆலங்குளம் - முக்கூடல் சாலையில் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்திய எஸ்.ஐ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலிவுறுத்தப்பட்டது.

போலீசார் மீது வழக்குப்பதிவு

அதனை எடுத்து ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, மற்றும் காவலர்கள் மணிராஜ், கார்த்திக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து போராட்டத்தினர் கலைந்து சென்றனர்.

======================