CBI has summoned former minister Senthil Balaji in connection with the Karur tragedy that claimed 41 lives google
தமிழ்நாடு

கரூர் துயரச் சம்பவம் : செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்: டெல்லி அலுவலகத்தில் 17ம் தேதி ஆஜர்

CBI Summoned Senthil Balaji on Karur Stampede Death Case : 41 பேரை பலி கொண்ட கரூர் துயரச் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, சிபிஐ சம்மன் அனுப்பி இருக்கிறது.

Kannan

கரூர் துயரச் சம்பவம்

CBI Summoned Senthil Balaji on Karur Stampede Death Case : கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

கரூர் வழக்கு - சிபிஐ விசாரணை

இது தொடர்பாக விசாரிக்க ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு நியமித்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள் நேரிடையாக விசாரணை நடத்தினர்.

விஜயிடம் சிபிஐ விசாரணை

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் டெல்லிக்கு சென்று விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜயுடன், ஜனவரி மாதம் இரண்டு முறை டெல்லி சென்று சிபிஐ முன்பு ஆஜரானார். இன்று அவர் 3வது முறை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், 15 நாட்கள் அவகாசம் கோரி இருக்கிறார் விஜய்.

செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்

இந்தநிலையில், முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் அவருக்கு சம்மன் கிடைத்து இருக்கிறது. வரும் 17ம் தேதி ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி விளக்கம்

இது தொடர்பாக செந்தில் பாலாஜி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சிபிஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன..

வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சிபிஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்” இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தவெக, திமுகவிற்கு சிக்கல்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் கரூர் வழக்கில் சிபிஐ வேகம் காட்டி வருவது, தவெகவிற்கு மட்டுமின்றி திமுகவிற்கும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

================