Census 2027: Online applications open from July 17; Tamil Nadu Government announces.  Ai generated
தமிழ்நாடு

Census 2027 : மக்கள்தொகை கணக்கெடுப்பு : ஜூலை 17 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (Census 2027), பொதுமக்கள் தங்கள் வீட்டின் விவரங்களை சுயமாக ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான காலம் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது

Rohini

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், தமிழ்நாடு அரசு

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (Census 2027), பொதுமக்கள் தங்கள் வீட்டின் விவரங்களை சுயமாக ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான காலம் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை தமிழ்நாடு அரசின் இதற்கான அதிகாரப்பூர்வ அதிகாரத்தில் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தரவுகளை எளிமையாக்க, டிஜிட்டல் முறை

வழக்கமாக மக்கள் தஒகை கணக்கெடுப்பானது கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாக வந்து தரவுகளைச் சேகரிப்பதற்கு முன்பாக,

இந்த டிஜிட்டல் முறையின் மூலம் தரவுகளை ஒவ்வொருவரும் சுயமாக பதிவேற்றம் செய்து கொள்வதற்கான எளிமையான தகவல் சேகரிப்பு முறையாக இந்த டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

ஜூலை 17 முதல் அமல்

தமிழ்நாட்டில் இந்த சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைபெற உள்ளது. வீடு வீடாக கணக்கீட்டாளர்கள் வருவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே இந்த ஆன்லைன் வசதி திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

டிஜிட்டல் தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது

முதலில் இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளமான https://se.census.gov.in/ சென்று , உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி லாகின் செய்து, மாநிலம், மாவட்டம், வார்டு உள்ளிட்ட விவரங்களை தேர்ந்தெடுத்து பதிவு செய்து , அதற்கு பின்னரான அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்

4 கேள்விகளுக்கு பதில் அளித்த பின்னர், 12 இலக்க அடையாள எண் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

பின்னர், தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட கணக்கெடுப்பாளர் வீடுகளுக்கு வரும்போது, அந்த 12 இலக்க அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு துவங்குவதற்கு 15 நாட்களுக்கு முன் டிஜிட்டல் சேவை

இந்த டிஜிட்டல் தளத்தில் குடும்பத் தலைவர் அல்லது தலைவியின் பெயரை மாற்ற முடியாது என்று தெரிவிக்கப்படுள்ளது , குறிப்பாக மாநிலம், யூனியன் பிரதேசத்தில் கணக்கெடுப்பு துவங்குவதற்கு 15 நாளுக்கு முன்னர் இந்த இணையதளம் செயல்பட தொடங்குகிறது. விருப்பப்படுபவர்கள் தங்களதுவிவரங்களை பதிவு செய்யலாம்.

========================