Tamil Nadu Population Census 2026 Online Self Enumeration CM Vijay Video cmotamilnadu,ai
தமிழ்நாடு

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்: "நான் பதிவு செய்துவிட்டேன்"- முதலமைச்சர் விஜய்யின் விழிப்புணர்வு வீடியோ!

மக்கள் தொகை கணக்கெடுப்பு: முதலமைச்சர் விஜய் தனது விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்தார்.

Kavitha prasanna

Tamil Nadu Population Census 2026 Online Self Enumeration CM Vijay Video

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026

தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் இன்று (ஜூலை 17) முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக இம்முறை முதல்முறையாக இணையவழி மூலமாக பொதுமக்கள் தாங்களாகவே தங்களின் விவரங்களை பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் விழிப்புணர்வு வீடியோ

இந்த நிலையில், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும், புதிதாக வந்துள்ள இணையவழி சுய பதிவு வசதி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் விஜய் முக்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"இது வெறும் எண்ணிக்கை இல்லை"

தமிழக முதலமைச்சரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அதிகாரப்பூர்வ விழிப்புணர்வு வீடியோவில், முதலமைச்சர் விஜய் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

அதில், "அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம். நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மிக முக்கியமான மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது.

நான் பதிவு செய்துள்ளேன் - முதல்வர் விஜய்

இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள் தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள். இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!

உங்கள் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாக செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!" என்று பதிவிட்டுள்ளார்.

அரசு தரப்பில் கோரிக்கை

முதலமைச்சரே முன்வந்து தனது கணக்கெடுப்பை பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, தமிழக மக்கள் அனைவரும் தங்களின் குடும்ப விவரங்களை எவ்விதத் தயக்கமுமின்றி இணையவழியில் துல்லியமாக பதிவு செய்யுமாறு அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

=====