Central government plans to introduce 10 important bills in Parliament Winter Session 2025 Schedule Dates in Tamil Google
தமிழ்நாடு

Dec.1: நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்: 10 முக்கிய மசோதாக்கள் தாக்கல்

Parliament Winter Session 2025 Schedule Dates in Tamil : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 10 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Kannan

குளிர்கால கூட்டத்தொடர்

Parliament Winter Session 2025 Schedule Dates in Tamil : நாடாளு​மன்ற குளிர்​கால கூட்​டம் டிசம்​பர் 1ம் தேதி ( நாளை ) முதல் 19ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது. பிகார் தேர்தலில் கிடைத்த அமோக வெற்றியால், உற்சாகத்துடன் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தக் கூட்டத் தொடரில் ஆர்வமுடன் பங்கேற்கிறது. பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப இந்தியா கூட்டணி திட்டமிட்டு இருக்கிறது.

வந்தே மாதரம் - 150வது ஆண்டு விழா

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு கொண்​டாடப்​படு​வ​தால் அதன் வரலாறு குறித்த விவாதம் நாடாளு​மன்​றத்​தில் நடை​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​தப் பாடலில் இருந்து முக்​கிய வரி​கள் கடந்த 1937ம் ஆண்டு நீக்​கப்​பட்​டதே இந்​தி​யா​வின் பிரி​வினைக்கு காரணம் என பிரதமர் நரேந்திர மோடி கூறி இருந்தார்.

வந்தே மாதரம்: வந்தே மாதரம் பாடலின் வரலாறு, சுதந்​திர இயக்​கத்​தில் அதன் பங்கு குறித்து இளைஞர்​களுக்கு நினை​வூட்​டு​வதற்​காக விவாதம் நடை​பெறும் என அதி​காரி​கள் கூறினர்.

10 மசோதாக்கள் தாக்கல்

அணு சக்​தி, உயர் கல்​வி, கார்ப்​பரேட் சட்​டம் மற்​றும் பங்​குச் சந்தை ஆகியவற்​றில் மாற்​றங்​கள் கொண்​டு​ வரு​வது தொடர்​பாக 10 முக்​கிய மசோ​தாக்​களை குளிர்​கால கூட்​டத்​தில் கொண்டு வரவும் மத்​திய அரசு திட்​ட​மிட்​டள்​ளது.

வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம், டெல்லி காற்று மாசு, வேலை​வாய்ப்​பின்மை தொடர்​பான பிரச்​சினை​கள் குறித்து அவை​யில் விவா​திக்க எதிர்க்​கட்​சிகள் வலி​யுறுத்​தும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ஆக்கப்பூர்வ விவாதம்

நாடாளுமன்ற குளிர்​கால கூட்​டத்​தில் எந்த பிரச்​சினை​ குறித்​தும் விவா​திக்க தயார் என மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. ஒரு​மித்த கருத்​துடன் அவையை சுமுக​மாக நடத்​து​வதற்கு வேண்​டு​கோள் விடுக்க அனைத்து கட்சி கூட்​டத்தை நா​டாளு​மன்ற விவ​காரத்​துறை அமைச்​சர்​ கிரண்​ ரிஜிஜு நாளை கூட்​டியுள்​ளார்​.

=====