Chance of heavy rain in 10 districts today; Chennai Regional Meteorological Centre reports.  google
தமிழ்நாடு

"10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Rohini

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதுப்படி , நீலகிரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களும் கனமழையை பெறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது

கனமழை பெறும் மாவட்டங்கள்

அதனபடி திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு, நாமக்கல் , கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து வானிலை மையம்

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலையியை பொறுத்தவரை

வெப்பநிலையை பொறுத்த வரையில் , சென்னையில் அதிகரிக்க கூடும் என்றும், இதனால் இயல்பான வாழக்கை முறையில் அசௌகரியம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.

========================