Chance of rain in 21 districts until 4 pm, Meteorological Department reports  google
தமிழ்நாடு

21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னைக்கும் வாய்ப்பு, வானிலை மையம் கணிப்பு!

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவிதுள்ளது

Rohini

இது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது

சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு

அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளிலிருந்து தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை உள் கர்நாடகா மற்றும் மராட்டியம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது

லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இன்று மழை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைபெறும் மாவட்டங்கள்

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி,

கன்னியாகுமரி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வான்னிலை மையம் தெரிவித்துள்ளது

சென்னையை பொறுத்த வரை

சென்னயை பொறுத்த வரையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்றும் , ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

==========