Changes in express train service, 6 trains including Nellai, Podigai to operate from Tambaram, extended till Apr22 google
தமிழ்நாடு

விரைவு ரயில் சேவையில் மாற்றம் : நெல்லை, பொதிகை உள்பட 6 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம் : ஏப்.22 வரை நீட்டிப்பு

சென்னை எழும்பூரில் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

Rohini

விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூரில் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

6 ரயில்கள் சேவை மற்றம் :ஏப்.22 வரை நீட்டிப்பு

நெல்லை, பொதிகை உள்பட 6 விரைவு ரயில்களின் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் செய்யப்ட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது , மேலும் இந்த மாற்றமானது வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படபடுவதாகவும் தெரிவித்துள்ளது.

பணி சீரமைப்பு காரணமாக சேவை மாற்றம்

சென்னை எழும்பூரில் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சில ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக, தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது

ரயில்களின் விவரம்

அதன்படி சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில், நாளை மறுநாள் (7-ம் தேதி) முதல் வரும் 22-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து தினசரி இரவு 8.05 மணிக்கு புறப்படும் என்றும் ,

சென்னை எழும்பூர் - ராமேசுவரம் விரைவு ரயில் (16751), நாளை மறுதினம் (7-ம் தேதி) முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் இருந்து இரவு 9.05 மணிக்கு இயக்கப்படும் என்றும் அதைப்போல

தாம்பரம் - ஐதராபாத் விரைவு ரயில் (12759). சென்னை கடற்கரையில் இருந்து நாளை முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் நெல்லை விரைவு ரயில்

அதன்படி, திருநெல்வேலி - சென்னை எழும்பூர் நெல்லை விரைவு ரயில், தாம்பரம் வரை மட்டும் இயக் கப்படும். தாம்பரத்தை காலை 6.25 மணிக்கு வந்தடையும் என்று தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே இந்த மாற்றம் நாளை முதல் 21-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது

இதுபோல, ராமேசுவரம்- சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16752), தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும். ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் விரைவு ரயில், சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரயிலின் மாற்றம் ஏப்.5ம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரை அமலில் இருக்கும்.