முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன்
திமுக மூத்த நிர்வாகிகளில் ஒருத்தரான மா. சுப்பிரமணியன் சென்னை மாநகர மேயராகவும், சுகாதாரத்துறை அமைச்சராவும் பொறுப்பு வகித்தவர்.
சிப்காட் நிலம் அபகரிப்பு
இவர் சென்னை மேயராக பொறுப்பு வகித்த போது, கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்ததாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சிபிசிஐடி போலீசார் வழக்கு
இந்த வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மா.சுப்ரமணியன் மீது மோசடி, கூட்டுச் சதி, ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சிறப்பு நீதிமன்றம் விசாரணை
இந்த வழக்கு சென்னையில் உள்ள சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு தள்ளிவைக்கபட்டது. இதனை எதிர்த்து மா.சுப்பிரமணியம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரின் மனுவை கடந்த ஆண்டு மே மாதம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் விசாரணை தள்ளவைக்கப்பட்டு வந்தது.
சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்து கூறினார்.
இதற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இது முற்றிலும் தவறு எனவும் தெரிவித்தனர்.
குற்றச்சாட்டுகள் பதிவு
இதனையடுத்து இருவர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் சாட்சி விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு நடைபெறும் என்று, தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
===