More electric train service on Chengalpattu route 49 stops: Passengers shocked!
Chennai Beach to Chengalpattu Local Train : சென்னை எழும்பூர் ரயில் நிலையம் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 204 மின்சார ரயில் சேவைகளை 164 ஆகக் குறைப்பதாக ரயில்வே அறிவித்தது.
எழும்பூரில் பராமரிப்புப் பணி
எழுப்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
அதன்படி கடந்த 4 நாள்களாக ரயில் சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
49 ரயில்கள் நிறுத்தம்
இந்த நிலையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மேலும் 49 ரயில் சேவைகள் இன்றுமுதல் குறைப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அலைமோதும் கூட்டம்
ஏற்கெனவே 30 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் வருவதால் கால் வைப்பதற்கு கூட இடமில்லா அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது.
லட்சக்கணக்கான மக்கள் அவதி
சென்னை புறநகர் பகுதியில் இருந்து பணிக்கு வந்து செல்லும் லட்சக்கணக்கான மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் பொதுத்தேர்வு, ஆண்டுத்தேர்வுகளை எதிர்நோக்கி இருக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே என்ன செய்யப் போகிறோம் , குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.
ஏற்கெனவே மின்சார ரயில் குறைப்பு, சிக்னல் , தொழில்நுட்பக் கோளாறு என ரயில்கள் சொன்ன நேரத்தை விட தாமதமாகத்தான் இயக்கப்படுகின்றன.
மேலும் ஆங்காங்கே தண்டவாளங்களிலேயே ஒன்றன் பின் ஒன்றாக நிற்கும் சூழல் தான் உள்ளது.
பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள பயணிகள்
இந்நிலையில் மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், சென்னை புறநகர் ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை எழும்பூரில் இருந்து 49 ரயில்கள்
இந்நிலையில், 49 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து தெற்கு ரயில்வே, சென்னை கடற்கரை- கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டுக்கு பதிலாக சென்னை எழும்பூர்-கூடுவாஞ்சேரி, சென்னை எழும்பூர்- செங்கல்பட்டு என 26 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
பயணிகள் குற்றச்சாட்டு
ஏற்கெனவே சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்களுக்கான முறையான அறிவிப்புகளும் செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டையும் பயணிகள் முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த 26 மின்சார ரயில்களுக்கான முறையான அறிவிப்புகளாவது வருமா? அல்லது இதே நிலைதான் தொடருமா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.