ரயிவேயின் அடுத்தடுத்த அறிவிப்பு, பொதுமக்கள் நிம்மதி
Chennai Egmore Railway Station Redevelopment : எழும்பூர் பராமரிப்பு பணிகள் காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை குறைக்கும் விதமாக தாம்பரம் முதல் கடற்கரை வரை தற்போதுள்ள ரயில்களுடன் கூடுதலாக 15 பெட்டிகள் கொண்ட 5 கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்தது.
அதன்படி இன்று முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் சற்று நிம்மதியடைந்து உள்ளனர்.
எழும்பூர் பராமரிப்பு பணி
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மின்சார ரயில் சேவைகள் தற்போது குறைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தெற்கு ரயில்வே அறிவிப்பு
பயணிகளின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்புகளையும் அடுத்தடுத்து அறிவித்து வருகிறது.
மார்ச்-ல் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை
அதன்படி பயணிகளின் வசதிக்காக முதலில் மார்ச் 10 ஆம் தேதி முதல் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை ரயில் இயக்கப்படும் என்று ரயில் கூடுதல் சேவைகளை அறிவித்துள்ளது.
40 சிறப்பு பேருந்துகள்
ரயில் பயணிகளுக்காகவே தற்போது தாம்பரம்- கடற்கரை இடையே கூடுதலாக 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் ஏற்கெனவே ரயில் பாஸ் எடுத்துள்ள பயணிகள் மட்டும் பயணிக்கலாம். அவர்கள் ரயில் பாஸ் காண்பித்தாலே போதுமானது.
பயணிகளின் சிரமத்தைக் குறைக்க, விரைவு மின்சார ரயில்கள்
இதைத்தொடர்ந்து மேலும் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் விதமாக, கூடுதல் விரைவு மின்சார ரயில் சேவையை தெற்கு ரயில்வே வழங்கியுள்ளது. அதன்படி, இன்று காலை முதலே விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
15 பெட்டிகள் கொண்ட 5 'விரைவு ரயில்'
தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இருமார்க்கத்திலும் காலை, மாலை நேரங்களில் மட்டும் 'விரைவு ரயில்' (Fast Line) பாதையில் தற்போதுள்ள ரயில்களுடன் கூடுதலாக 15 பெட்டிகள் கொண்ட 5 கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
முக்கிய நிறுத்தங்கள்
இந்த விரைவு மின்சார ரயில்கள் தாம்பரம், மாம்பலம், கிண்டி, சென்னை எழும்பூர் மற்றும் சென்னை கடற்கரை என முக்கிய நிறுத்தங்களில் மட்டுமே மட்டுமே நின்று செல்கிறது.
ரயில் பயணிகள் சற்று நிம்மதி
40 கூடுதல் பேருந்துகள், ரயில் பாஸ் இருந்தால் டிக்கெட் எடுக்க வேண்டாம், மார்ச் 10 முதல் பரங்கிமலை-வேளச்சேரி ரயில், தற்போது கூடுதல் விரைவு மின்சார ரயில்கள் என தெற்கு ரயில்வே மற்றும் மாநகரப் போக்குவரத்தின் சேவைகளால் , எழும்பூர் பராமரிப்பு பணிகளால் சிரமத்திற்கு ஆளான பொதுமக்களின் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.