சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு
Chennai High Court on EC Cancelled 42 Registered Political Parties : தேர்தல் ஆணையத்தின் பதிவு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதன் தடையை நீக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது .
இந்திய தேர்தல் ஆணையம் ரத்து
தமிழகத்தின் 42 கட்சிகள் உட்பட நாடு முழுவதும் 474 கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது காரணம் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாதது மற்றும் செலவு கணக்கு தாக்கல் செய்யாத காரணங்களினால் , தமிழகத்தின் 42 கட்சிகள் உட்பட நாடு முழுவதும் 474 கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு
உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா அமர்வு, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என கூறி மறுத்துவிட்டது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கிணை விசாரித்த அமர்வு அடுத்த கட்டவிசாரணை மார்ச் இரண்டாம் வாரத்திற்கு ஒத்திவைக்கபடுவதாக கூறி வழக்கினை தள்ளுபடி செய்தது .