Chennai Madhya Kailash Opening Update L' shaped flyover Inauguration at Madhya Kailash! Now no traffic in Guindy, OMR google
தமிழ்நாடு

மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம் திறப்பு : சிறப்பம்சங்கள்

Madhya Kailash Flyover : சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.60.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தற்போது திறக்கப்பட்டுள்ளது .அதன் முக்கியமான அம்சங்கள் இதோ

Rohini

சென்னை மத்திய கைலாஷ் 'L' வடிவ மேம்பாலம்

Madhya Kailash Flyover Opening in Chennai : சென்னை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.60.68 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலமானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது .

நெடுநாளாக கடும் வாகன நெரிசலானது இப்பகுதியில் ஏற்பட்ட நிலையில் இப்புதிய மேம்பாலம் சற்று நிம்மதியை அளித்துள்ளது.

'L' மேம்பாலத்தின் சிறப்பம்சங்கள்

வாகன நெரிசலுக்கு நிரந்தர தீர்வு

பல நாட்களாக மேம்பால கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர் தற்போது இந்த மேம்பாலமானது திறக்கப்பட்டுள்ள நிலையில் நெரிசலுக்கு நிரந்தர தீர்வந்து கிடைத்துள்ளது.

நேரம் மற்றும் சிக்கனலில் இருந்து தப்பிப்பு

இப்பகுதியானது கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வந்த நிலையில், பலரும் அவ்விடத்திலேயே பல மணி நேரம் காக்க வேண்டிய சூழலால் உரித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிர்த்தனர் ,

தற்போது இந்த சிக்கலானது முற்றிலும் தீர்ந்து வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது .கிண்டியிலிருந்து வரும் வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் இந்தப் பாலத்தின் வழியாக நேரடியாக ஓஎம்ஆர் (ராஜீவ் காந்தி சாலை) சென்றடையலாம்.

படிப்படியாக நிறுத்தப்படும் டிராபிக் சிக்னல்

மத்திய கைலாஷ் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் அகற்றப்படுவதால், சர்தார் பட்டேல் சாலையில் வாகனங்கள் தேக்கமின்றி நகர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் பயன்பாட்டால் மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்த போக்குவரத்து டிராபிக் சிக்னல் இனி படிப்படியாக நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளது .

L' பாலத்தின் நவீன வடிவமைப்பு

68 கோடி ரூபாய் செலவில், 'L' வடிவில் இருவழித் தட அகலத்துடன் ஒருவழிப் போக்குவரத்திற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.அணுகு சாலை உட்பட இந்தப் பாலத்தின் மொத்த நீளம் 652 மீட்டர் ஆகும்.

சர்தார் பட்டேல் சாலையிலிருந்து திரும்பும் வளைவானது 45 மீட்டர் ஆரம் (Radius) கொண்ட நேர்த்தியான வளைவாக அமைக்கப்பட்டுள்ளது.

இரவு நேர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு

இரவு நேர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்க்காக பாலத்தின் ஓடுதளத்தில் வழித்தடக் கோடுகள் (Lane Marking) மற்றும் உயர்தர மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

குறைந்த பயண நேரம்

கிண்டி, அடையாறு, மத்திய கைலாஷ் ஆகிய பகுதிகளில் 20 நிமிடங்களுக்கும் மேலான பயண நேரம் மிச்சமாகும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் தரமணி, சிறுசேரி, துரைப்பாக்கம் நோக்கிச் செல்லும் ஐடி ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது .

மேலும், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி (IIT Madras) வாசலில் ஏற்படும் நேர்சல்களும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

===============