Chennai Metro Job Vacancy 2025 Announcement Various Position in CMRL Recruitment Check Interview Date in Tamil CMRL
தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிறுவனங்களில் வேலை-அப்ளை செய்வதற்கு முந்துங்கள்!

Metro Job : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்னீஷியன் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்கள் நிரப்பப்ப, ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bala Murugan

சென்னை மெட்ரோ ரயில்

Chennai Metro Job Vacancy 2025 : சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் போக்குவரத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக மெட்ரோ ரயில்கள் மாறியுள்ளன. கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மெட்ரோ ரயில் சேவை தற்போது விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணி

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ(Chennai Metro Phase 2) அமைப்புக்கு தேவையான டெக்னீஷியன் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

காலிப்பணியிடங்கள்: சூப்பர்வைசர், டெக்னீஷியன்-ஆர்.எஸ்., மின் மற்றும் மேலாண்மை, சிவில் & தடம் ஆகிய பிரிவுகளில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மெட்ரோ நிறுவாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதியைப் பொறுத்தவரை டெக்னீஷியன் பணிக்கு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரீஷியன், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஃபிட்டர், பிளம்பர், வெல்டர் உள்ளிட்ட பிரிவுகளில் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன.

தேர்வு அறிவிப்பில் முடிவு செய்து கொள்ளவும்

அதேபோல, சூப்பர்வைசர் பணிக்கு தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் அல்லது அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆண்டுகள் கொண்ட இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் படித்து உறுதி செய்து கொள்ளவும்.

பணிக்கான வயது வரம்பு

18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது. சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் நடைபெறும் தேதி: டெக்னீஷியன் பணிக்கு சென்னையில் வரும் 6 மற்றும் 7 ஆம் தேதிகளிலும், கோவையில் 11 ஆம் தேதி, மதுரையில் 14 ஆம் தேதியும் நடைபெறும்.

நேர்காணல் தேர்வுக்கனா நாள்

சூப்பர்வைசர் பணிக்கு சென்னையில் நவம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளிலும்(Chennai Metro Job Interview Date), கோயம்புத்தூரில் நவம்பர் 10, மதுரையில் நவம்பர் 13 ஆகிய நாட்களில் நேர்காணல் நடைபெறும். சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Govt. Industrial Training Institute, Labour Colony, SIDCO Industrial Estate, Guindy, Chennai-600032 Supervisor (Operations) கோவையில் நடைபெறும் இடம்: Govt. Industrial Training Institute, Mettupalayam Road, GN Mills Post, Coimbatore-641029 தேர்வர்கள் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி, கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://backend.delhimetrorail.com/documents/9501/CMRL-TECHNICIAN_28.10.2025.pdf https://delhimetrorail.com/pages/en/career என்ற வலைத்தளத்திலும் தேர்வர்கள் அறிவிப்பை பார்க்கலாம். டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) வழியாக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.27,014 (டெக்னீஷியன்), ரூ.30,000 (சூப்பர்வைசர்) வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.