Chennai Rain Update Due to deep depression over Bay of Bengal, rain is continuing in 5 districts Google
தமிழ்நாடு

சென்னை அருகே ஆழ்ந்த தாழ்வு மண்டலம் : 5 மாவட்டங்களில் கனமழை தொடரும்

Chennai Rain Update Today in Tamil : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக் கடலில் நிலவுவதால், சென்னை உட்பட 5 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Kannan

வலுக்குறைந்த டிட்வா புயல்

Chennai Rain Update Today in Tamil : டிட்வா புயலானது வங்கக் கடலில் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னையில் பலத்த மழை

சென்னையில்(Chennai Rain Update in Tamil) கிண்டி, வேளச்சேரி, அண்ணாநகர், போரூர், ராமாபுரம், தாம்பரம், அம்பத்தூர் மற்றும் புறநகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்திற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேகம் குறைந்த தாழ்வு மண்டலம்

சென்னைக் கடற்கரைக்கு அருகே தொடர்ந்து நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம், மணிக்கு 10 கி.மீ. என்ற வேகத்தில் இருந்து 5 கி.மீ. ஆக குறைந்து இருக்கிறது. மேற்கிலிருந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை டிட்வாவின் புயலுடன்(Ditwah Cyclone Update in Tamil) மோதி, ஈரப்பதத்தை வடக்கிலிருந்து அளித்து, அமைப்பின் வடபகுதியில் புதிய மேகக்கூட்டங்களை உருவாக்கி வருகிறது.

5 மாவட்டங்களில் கனமழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை காலைவரை கனமழை பெய்யக்கூடும் மற்றும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்டாவில் மழை குறையும்

அதேசமயம், காவிரி டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் மழை குறையும். இருப்பினும், மேற்கத்திய காற்றினால் மாலை/இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தாழ்வு மண்டலம் கடற்கரைக்கு மிக அருகில் இருப்பதால், கடல் சீற்றம் கடுமையாகவே இருக்கும், கரையோரப் பகுதிகளில் பலத்த சீற்றக் காற்று வீசும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்

இதனிடையே அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது பிற்பகல் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது.

==========================