சென்னையில் தகித்த வெயில்
கத்திரி வெயில் காலம் என்றாலும், தமிழகத்தில் வானிலை கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
சில நாட்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்றைய தினம் 108 டிகிரி செல்சியஸை தாண்டி இருந்தது,
வெப்ப அலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது. ஆனால், இன்று காலை வானிலை அடியோடு மாறியது.
சென்னையில் பலத்த காற்று
அதிகாலையில் லேசான தூறல் விழ, கடற்கரை மற்றும் நகரின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
குறிப்பாக பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான சூறைக்காற்று வீசியது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தி இருக்கிறது.
புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சொல்லப்படுகிறது.
சென்னையில் கடும் புழுக்கம்
சென்னையை பொருத்தவரை பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததோடு, இரவில் கடல்காற்று வீசாததால், புழுக்கமான சூழல் நிலவி வந்தது.
இன்று காலை வானிலை மாறிய நிலையில், தரைகாற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.
அரபிக்கடலில் ஏற்பட்ட மாற்றம்
தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்கிழக்கு அரபிக் கடல் ஒரு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
குமரி கடல் மற்றும் தென் தமிழக பகுதிகள் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை நிலவில் வருகிறது.
எனவே வரும் 26ம் தேதி வரை தமிழகத்தை மழை நீடிக்க வாய்ப்புள்ளது. .
சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
==============