Chennai To Tirunelveli Vande Bharat Express Train 
தமிழ்நாடு

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் 20 பெட்டிகள்: மக்கள் வரவேற்பு

Chennai To Tirunelveli Vande Bharat Express Train : சென்னை நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இன்று முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுவதால், கூடுதலாக பொதுமக்கள் பயணிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

Kannan

வந்தே பாரத் ரயில்கள் :

Chennai To Tirunelveli Vande Bharat Express Train Additional Coach : நாடு முழுவதும் அதிவிரைவு ரயில்கள் பல பெயர்களில் இயக்கப்பட்டு வந்தாலும், விமானத்திற்கு இணையான வசதிகளுடன், சரியான நேரத்திற்கு புறப்படுதல், சென்றடைதலுக்கு ஏற்ற வகையில் வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் பகல் நேரங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. படுக்கை வசதிகளுடன் இரவு நேரத்திலும் வந்தே பாரத் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை - நெல்லை வந்தே பாரத் :

அந்த வகையில், சென்னையில் இருந்து நெல்லைக்கு பகல் நேரத்தில் வந்தே பாரத் ரயில்(Chennai To Tirunelveli Vande Bharat Express Train Timings) இயக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் இருந்து காலை 6.05 மணிக்கு ரயில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை ரயில் நிலையத்தை வந்தடைகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், இரவு 10.40 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை சென்றடைகிறது.

20 பெட்டிகளுடன் வந்தே பாரத் :

இந்த வழித்தடத்தில் முதன் முதலாக வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. 8 மணி நேரத்தில் பயணம் செய்ய முடிந்ததால், பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. அதிக அளவில் பயணிகள் வந்தே பாரத் ரயிலில் செல்ல முயன்றதால், கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டன. ஆனாலும் தேவை அதிகமாக இருந்ததால், பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப,மேலும் நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு, இன்று முதல் 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

மேலும் படிக்க : ஆயுத பூஜை, தீபாவளிக்கு “ சிறப்பு ரயில்கள்” : முன்பதிவு தொடக்கம்

பயணிகள் வரவேற்பு, பெருகும் ஆதரவு :

இதனால், சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில்(Chennai To Tirunelveli Vande Bharat Express Train Update) கூடுதலாக 312 பேர் பயணிக்க முடியும். அதாவது ஒரே நேரத்தில் 1,440 பயணிகள் ரயிலில் பயணிக்கலாம். 18 சேர் கார் பெட்டிகள், 2 எக்சிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகள் உள்ளன. சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை ஆகியவை நெருங்கி வரும் நிலையில், ஏராளமான பொது மக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும். மற்ற வழித்தடங்களிலும், வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

=====================