Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik. again clarified that no documents need to be submitted with Special Urgent Correction of Voter List form Google
தமிழ்நாடு

”SIR படிவத்துடன் ஆவணம் கொடுக்க தேவையில்லை" : தேர்தல் ஆணையம்

SIR Form : வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் படிவத்துடன் எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Kannan

தமிழகத்தில் SIR பணிகள்

SIR Form Fill Up No Documents Required in Tamil Nadu : தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 4ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை வழங்கி நிரப்பி அவற்றை திரும்ப பெறும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

SIR தொடர்பாக விமர்சனங்கள்

படிவங்களை தவறுதலாக பூர்த்தி செய்து முகாமிற்கு எடுத்து வரும் பொதுமக்களின் படிவங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒயிட்னர் மூலம் திருத்தி எழுதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதேபோன்று, படிவம் சரியாக இருப்பின், ஆவணங்கள் ஏதும் பெறக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தும், ஆவணங்களை கொண்டு வரும்படி வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தேர்தல் ஆணையம் விளக்கம்

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ள, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் படிவத்துடன் எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

சரியான விவரங்கள் போதும்

கணக்கீட்டு படிவங்களில் வாக்காளர்கள் தங்களது சரியான விவரங்களை வாக்குச்சாவடி அலுவலர்களின் உதவியுடன் நிரப்பி சமர்ப்பிக்கலாம் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

படிவங்களை அவசியம் கொடுக்க வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில்(Tamil Nadu Draft Voter List Release Date in Tamil) இடம் பெறும். எனவே, வாக்காளர்கள் அனைவரும் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் வீட்டிற்கு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் தவறாமல் ஒப்படைக்க வேண்டியது அவசியம்.

================