தமிழகம் - 97 லட்சம் பேர் நீக்கம்
Chief Electoral Officer Archana Patnaik has said that people can submit Form 6 again to get their names added to the voter list : கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, 97 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பெயர் சேர்க்க அவகாசம்
நீக்கப்பட்டவர்கள் தகுதியிருப்பின் உரிய ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்தசூழலில் அனைத்து பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி, தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380
ஆண் வாக்காளர்கள்: 2,77,38,925
பெண் வாக்காளர்கள்: 2,89,60,838
மூன்றாம் பாலினத்தவர்: 7,617
74,07,207 வாக்காளர்கள் நீக்கம்
பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்
செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி பெரிய தொகுதியாக இருக்கிறது. இங்கு அதிகபட்சமாக 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர்.
சிறிய தொகுதி துறைமுகம்
துறைமுகம் தொகுதியில் குறைந்தபட்சமாக 1,68,96 வாக்காளர்கள் உள்ளனர்.
மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பம்
இன்று முதல் மீண்டும் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை (Form 6) பொதுமக்கள் வழங்கலாம். வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் ஆணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்துள்ள வாக்காளர்கள் தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.
தலைமை தேர்தல் ஆணையர் வருகை
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமார் வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார். அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும்” என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு 2025-ல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில்,எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 5.67 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்
===========