Chief Minister Vijay, DMK leader Stalin, extended their greetings on the occasion of Onam festival AI generated
தமிழ்நாடு

“அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகள்” : முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து...!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Kannan

மலையாள சொந்தங்களுக்கு ஓணம் வாழ்த்து

மலையாள மொழி பேசும் மக்களின் அறுவடை திருநாளான ஓணம் இன்று வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது. இதையொட்டி, முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, ”உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!

வாழ்க்கை பொலிவு பெறட்டும்

கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!

அன்பை பரிமாறும் திருவிழா

அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமத்துவம் மலரட்டும்

மாவேலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நினைவை புதுப்பிக்கும் திருவிழா

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, “ மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.

மாவேலி மன்னனை கொண்டாடுவோம்

பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர். எல்லார்க்கும் எல்லாம் என்பதே நம் இலக்காகட்டும். மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்.

மாவேலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள்!” இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

=============