அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு
தமிழக அரசு ஊழியர்களில் பெண்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 365 நாட்கள், அதாவது ஒரு ஆண்டு காலம் வழங்கப்படுது.
இந்தநிலையில், குடும்ப நலன் மற்றும் குழந்தை பராமரிப்பில் தந்தையரின் பங்கை உறுதி செய்யும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டின் நிர்வாக அமைப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் குடும்ப நலன் மற்றும் குழந்தை பராமரிப்புச் சலுகைகளை விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாக, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் மகப்பேறு கால விடுப்பு (Paternity Leave) வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தாயின் பராமரிப்பிற்கு உதவி
குழந்தை பிறக்கும் தருணத்திலும், அதனைத் தொடர்ந்த ஆரம்பக் காலப் பராமரிப்பிலும் தாய்க்குத் துணையாகவும், குழந்தையின் நலனில் பங்குதாரராகவும் ஆண் பணியாளர்கள் செயல்படுவதற்கு வசதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கைகளுக்குப் பலன் கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெண் அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே மகப்பேறு கால விடுப்புச் சலுகைகள் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு அவர்தம் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாள்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்படும்.
15 நாட்கள் விடுப்பு
அந்த விடுப்பினைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாள்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ எடுத்துக் கொள்ளவும்” ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
================