ரூ.300 கோடியில் பெரியார் நூலகம்
கோவை காந்திபுரத்தில், 7 ஏக்கர் நிலபரப்பில், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'பெரியார் அறிவுலகம்' என்ற பெயரில் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் திறந்து வைத்தார்
2024ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகள், கடந்த 2 மாதங்களுக்கு முன் நிறைவடைந்தன. இந்தச்சூழலில் தான், இன்றைய தினம், பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
கோவையில் சிறப்பான வரவேற்பு
இதற்காக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்ற அவர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காந்திபுரம் சென்றார். வழிநெடுகிலும் கூடியிருந்த பொதுமக்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெரியார் சிலை, நூலகம் திறப்பு
பெரியார் அறிவுலகம் முகப்பில் உள்ள பெரியார் சிலையை தொடர்ந்து வைத்தார். இதையடுத்து, நூலகம் மற்றும் அறிவியல் மையத்தையும் தொடங்கி வைத்த முதல்வர் அவற்றை பார்வையிட்டார்.
பெரியார் அறிவுலகத்தின் சிறப்பம்சங்கள் :
* 98 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் கட்டடம், புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பதை போன்ற வடிவமைப்பு
* தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் நூலக வசதி
* விண்வெளி, கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் தொடர்பான அனுபவத்தைப் பெறும் வகையில் கோளரங்கம்
* அறிவியல் உபகரணங்கள், கண்காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப அனுபவங்கள் மூலம் அறிவியல் கருத்துகளை அறிந்துகொள்ள நவீன அறிவியல் மையம்
* சிறுவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் வகையில் குழந்தைகள் நூலகம்
* அரசு வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வு நூலகம்
* கருத்தரங்குகள், கல்வி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்காக 350 பேர் அமரக்கூடிய நவீன அரங்கம்
* மாற்றுத்திறனாளிகளும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தனித்துவமான, நூலக வசதி
* புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் மையங்கள்
* மின்னணு நூல்கள், கணினி வழிக் கற்றல் மூலம் நவீனக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நவீன டிஜிட்டல் வசதிகள்
என பல்வேறு சிறப்பம்சங்களை பெரியார் அறிவுலகம் கொண்டுள்ளது.
====