Chief Minister Vijay is considering plan to make Trichy second capital, announcement is expected soon. source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

”முக்கியத்துவம் பெறும் திருச்சி” : 2வது தலைநகரமாகிறதா மலைக்கோட்டை? : முதல்வர் விஜய் பரிசீலனை, விரைவில் உத்தரவு..!

திருச்சியை 2வது தலைநகரமாக்கும் திட்டம் பற்றி முதல்வர் விஜய் பரிசீலித்து வருவதாகவும், விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Kannan

நெரிசலில் சென்னை பெருநகரம்

தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்து வரும் நிலையில், மக்கள்தொகை பெருக்கம், போக்குவரத்தை நெரிசல் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு எடுக்கும் முனைப்புகளுக்கும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் போதிய இட வசதி இல்லாததுதான்.

2வது தலைநகராக திருச்சி

இரண்டாவது தலைநகராக திருச்சியை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே எழுந்து வருகிறது. குறிப்பாக திருச்சியை தலைநகராக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வரும் நிலையில் அதனைப் பற்றிய ஆய்வில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

சென்னையில் அனைத்து அரசு அலுவலகங்கள்

துறைமுகங்கள், விமான நிலையம் என பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள், நிர்வாக கட்டமைப்புகள், காரணமாக சென்னை தான் சிறந்த தேர்வாக இருந்தது. தலைமைச் செயலகம் தொடங்கி பல்வேறு அரசு அலுவலகங்களும் சென்னையில் தான் இருக்கிறது.

2வது தலைநகரம் அவசியம்

இதனால், கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற கடைக்கோடி தென் மாவட்ட மக்களும் சென்னைக்கு வரவேண்டிய சூழல் இருக்கிறது. எனவே, ஒவ்வொரு ஆட்சியிலும் இரண்டாவது தலைநகரம் என்ற பேச்சு எழுவதும் பின்னர் அது அடங்கிப் போவதும் வழக்கமாக நடக்கிறது.

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலேயே திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற திட்டமிட்டு நிலையில் பல்வேறு காரணங்களால் அது கைகூடவில்லை.

இந்த நிலையில் தற்போது திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்திருக்கிறது.

மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கணும்

சென்னைக்கு அருகே துணை நகரம் அமைக்கப்படும் என பேசப்பட்டு வரும் நிலையில் திருச்சியை இரண்டாவது தலைநகராக தேர்ந்தெடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக ஆயிரம் கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டிய தென் மாவட்ட மக்கள் திருச்சிக்கு வந்து செல்வது எளிதாக இருக்கும். திருச்சியை இரண்டாவது தலைநகராக மேம்படுத்தினால் மத்திய மற்றும் தென் மாவட்ட மக்கள் அரசு சேவைகளை பெறுவதற்கு எளிதாக இருக்கும்.

தமிழக அரசு பரிசீலனை

விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலைகள் இணைப்பு என பல்வேறு போக்குவரத்து வசதிகளும் திருச்சியில் இருப்பதால் இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே பல மாநிலங்களில் இரண்டாவது தலைநகர், துணைத் தலைநகர் இருக்கும் நிலையில் தற்போது தமிழக அரசு இரண்டாவது தலைநகராக திருச்சியை அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாகவும். விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

================