Reports indicate that Chief Minister Vijay is set to undertake a whirlwind four-day tour in connection with the by-elections for two constituencies
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதியில் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்தத் தேர்தலில் தவெக, திமுக அதிமுக, நாதக மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. குதிரை பேரம் நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் கூட்டம் சாட்டிய நிலையில் இந்த இடைத்தேர்தலில் தவெகவின் வெற்றி மிகவும் அவசியமானதாக பார்க்கப்படுகிறது.
தவெகவிற்கு வெற்றி மிகவும் முக்கியம்
ஒன்று, சட்டசபையில் கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரிக்கும். 2வது இடைத்தேர்தலிலும் வெற்றி, மக்களின் ஆதரவு தங்கம் பக்கம் நிருபித்தது போலவும் இருக்கும் என்று விஜய் கருதுகிறார்.
தேர்தல் பணிக்குழு
எனவேதான், இடைத்தேர்தலில் வெற்றியை வசப்படுத்த கடந்த வாரம் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்தது தவெக தலைமை.
பிரசாரம் செய்கிறார் விஜய்?
இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் முதல்வர் விஜய் நேரடியாக ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன்படி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் 4 நாட்கள் பிரச்சாரம் செய்வார் எனத் தெரிகிறது.
இரண்டு தொகுதிகளிலும் தலா 2 நாட்கள்
முதலில் மதுராந்தகத்தில் 2 நாட்கள், அதன் பிறகு தாராபுரத்தில் 2 நாட்கள் என 2 கட்டங்களாக முதலமைச்சர் விஜய் தவெக வேட்பாளர்களை ஆதரித்து 4 நாட்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
தவெக - அதிமுக கடும் போட்டி
இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு பிரகாசமாக இருக்கிறது என்பதை கணிப்பதே கடினமாக இருக்கிறது.
ஆளுங்கட்சியான தவெக-விற்கும், அதிமுகவிற்கும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு தொகுதிகளும் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
களத்தில் சவால் விடுக்கும் திமுக
திமுகவும், வேட்பாளர்களை இறக்கி, களப்பணியை முடுக்கி விட்டு இருக்கிறது. இது வேண்டுமென்றே திணிக்கப்பட்ட தேர்தல் என்று பரப்புரை செய்கிறது திமுக. இன்னொரு பக்கம், கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழரும் போட்டியில் உள்ளனர்.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இது என்பதால், நேரில் களமிறங்கி ஆதரவு திரட்ட முதல்வர் விஜய் முடிவு செய்து இருக்கிறார்.
=============