காவல்துறை மானியக் கோரிக்கை
CM Vijay Police Announcement : சட்டசபையில், தனது துறையின் கீழ் 59 அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.
கூடுதல் பணியிடங்கள் உருவாக்கம்
மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவலர் பணியிடங்கள் படிப்படியாக அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
10,000 காவலர்கள் நியமனம்
தமிழ்நாடு காவல் படையில் இவ்வாண்டில் 5,000 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 10,000 காவலர்கள் நியமிக்கப்படுவர்.
போதைப்பொருள் ஒழிப்புக்கு பரிசு
போதைப் பொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக ஒழிக்கும் கிராமம் ஒன்றுக்கு ரூபாய் 10 இலட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும். ரூபாய் 212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும்.
நவீனமயமாக்கப்படும் காவல்துறை
செயற்கை நுண்ணறிவு, நவீன டிஜிட்டல் தடயவியல், நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பு, நவீன தகவல் தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
செலவினம் உயர்த்தி வழங்கப்படும்
லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், சிறப்புப் பிரிவுகளுக்கும் அனுமதித்திருந்த எதிர்பாரா செலவினம் (Contingency Fund) உயர்த்தி வழங்கப்படும்.
உயிரிழந்தால் 1 கோடி இழப்பீடு
பணியின்போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூபாய் 1 கோடி வழங்கப்படும்.
பணிக்காலத்தில் இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும்
கருணைத்தொகை ரூ.30,00,000
கருணைத் தொகை (Ex-gratia Payment) இருபது இலட்சம் ரூபாயிலிருந்து முப்பது இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
வண்டலூர் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு காவலர் உயர் பயிற்சியகத்தில் (Tamil Nadu Police Academy) உள்விளையாட்டு அரங்கம் மற்றும் வெளிப்புற விளையாட்டு வசதிகள் ரூபாய் 23 கோடி செலவில் அமைக்கப்படும்.
சேலம் மற்றும் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் புதிய மரபணு ஆய்வகம் (DNA TESTING FACILITY) சுமார் 14 கோடி செலவில் நிறுவப்படும்
தீயணைப்பு நிலையங்கள்
6 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் 16 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.
10 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 131 புதிய குடியிருப்புகள் ரூபாய் 80 கோடி செலவில் கட்டப்படும்.
ரூ. 200 கோடியில் புதிய வாகனங்கள்
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பயிற்சிக் கழகத்தின் (Fire and Rescue Services Academy( ن பணிகள் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக புதிய வாகனங்கள் ரூபாய் 200 கோடி செலவில் வாங்கப்படும்.
திருமழிசை காவல் சரகம்
ஆவடி ஆணையரகத்தில் உள்ள ஆவடி காவல் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய பூந்தமல்லி காவல் மாவட்டமும் மற்றும் பூந்தமல்லி காவல் சரகம் பிரிக்கப்பட்டு திருமழிசை காவல் சரகமும் உருவாக்கப்படும்.
கிளாம்பாக்கம் காவல் சரகம்
தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சட்டம் ஒழுங்கு காவல் மாவட்டங்கள் மற்றும் சரகங்களை மறுசீரமைப்பு செய்து புதிதாக கிளாம்பாக்கம் காவல் மாவட்டம் உருவாக்கப்படும். மேலும், கூடுவாஞ்சேரி சரகத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக கிளாம்பாக்கம் காவல் சரகம் உருவாக்கப்படும்.
காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு காவல் பிரிவுகளின் தூய்மைப் பணிகள் வெளிமுகமை (outsourcing) மூலம் ஆண்டிற்கு ரூபாய் 60 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
கோயம்புத்தூர் மாநகரம், காந்திபுரத்தில் காட்டூர் காவல் நிலையம் மற்றும் இதர அலுவலகக் கட்டடங்கள் ரூபாய் 21 கோடி செலவில் கட்டப்படும்.
நீலகிரி மாவட்டம், எமரால்டு காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூபாய் 4.15 கோடி செலவில் கட்டப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூபாய் 3.29 கோடி செலவில் கட்டப்படும். சேலம் மாநகரம், கருப்பூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூபாய் 2.65 கோடி செலவில் கட்டப்படும்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூரில் புதிய நகர காவல் நிலையக் கட்டடம் ரூபாய் 2.53 கோடி செலவில் கட்டப்படும்.
தென்காசி மாவட்டம், அய்யாபுரத்தில் புதிய ஊரகக் காவல் நிலையக் கட்டடம் ரூபாய் 2.14 கோடி செலவில் கட்டப்படும்” இவ்வாறு முதல்வர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.
================