சிறப்பாக பணியாற்றுவோருக்கு அங்கீகாரம்
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் கூடம் மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களிள் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும்...
அண்ணா பதக்கங்கள்
பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
காவல்துறையில் 138 பேருக்கு பதக்கம்
அந்தவகையில் இந்த ஆண்டு, காவல் துறையில், தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 நபர்களுக்கும்..
தீயணைப்பு - 20 பேருக்கு பதக்கம்
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில், தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 20 நபர்களுக்கும்,
சிறைகள் மற்றும் சீர்திருத்தபணிகள் துறையில, முதல்நிலை சிறைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலான 10 நபர்களுக்கும்
அண்ணா சிறப்புப் பதக்கங்கள்
ஊர்க்காவல் படையில், ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத் தளபதி வரையிலான 5 நபர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறையில் 4 அலுவலர்களுக்கும்,
முதல்வர் விஜய் உத்தரவு
அவர்களின் மெச்சத்தக்க பணியினை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள் வழங்கிட, முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
=====