நலத் திட்டங்களில் தவெக அரசு தீவிரம்
தமிழக அரசு சமூக நலன் மற்றும் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.
"தாய்மாமன் தங்க மோதிரம்"
அந்த வரிசையில், பொதுமக்கள் மற்றும் தாய்மார்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "தாய்மாமன் தங்க மோதிரம்" என்ற சிறப்புத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி மதுரையில் முறைப்படி தொடங்கி வைக்கவுள்ளார்.
தாய்மாமன் உறவுமுறை
தமிழர் பண்பாட்டிலும் குடும்ப உறவுகளிலும் தாய்மாமன் செய்யும் சீர்வரிசையும், வழங்கும் பரிசுகளும் மிக உயரிய இடம் எப்போதும் உண்டு.
தாய்மாமன் சீர் - பாரம்பரிய நடைமுறை
தொன்மையான பாரம்பரிய நடைமுறையை அரசு நிர்வாகத்துடன் இணைத்து, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசின சார்பில் 'தாய்மாமன்' என்ற அன்பின் உறவுமுறையோடு சீர்செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம்
பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் அவர்களின் பிறந்த குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மருத்துவப் பராமரிப்பை உறுதி செய்வதோடு, எளிய குடும்பங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
பயனாளிகள்: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் புதுமணக் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் இலவசமாக வழங்கப்படும்.
தரக்கட்டுப்பாடு: வழங்கப்படும் தங்க மோதிரங்கள் அனைத்தும் 22 காரட் (BIS Hallmark) தரச்சான்று பெற்றவையாக இருக்கும்.
பாதுகாப்பு வசதி: குழந்தைகள் பாதுகாப்பாக அணியும் வகையில் கூர்மையற்ற, மென்மையான வடிவமைப்புடன், சிறப்புப் பாதுகாப்புப் பெட்டியில் (Tamper-evident packaging) வைத்து வழங்கப்படும்.
நிதிொ ஒதுக்கீடு: இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் தடையின்றிச் செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் சுமார் ₹755 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தொடக்க விழா
தென் தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் விஜய் நேரில் வழங்குகிறார்
இந்த விழாவில் பல தாய்மார்களுக்கு நேரில் தங்க மோதிரங்களை வழங்கித் திட்டப் பணிகளை அவர் முடுக்கிவிடவுள்ளார்.
மதுரையில் தொடங்கி வைக்கப்படும் இத்திட்டம், அன்றைய தினமே மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
தமிழகத்தின் சமூக நலத் திட்டப் வரலாற்றில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று தெரிகிறது.
இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் உடனடியாக செயல்பாட்டிற்கு வருகிறது.
======================