Chief Minister Vijay will release water from the Mettur Dam tomorrow for irrigation in the Cauvery Delta AI generated
தமிழ்நாடு

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறப்பு : முதல்வர் விஜய் நீரை திறந்து விடுகிறார் : தமிழக விவசாயிகள் உற்சாகம்..!

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை நாளை திறந்து விடுகிறார் முதலமைச்சர் விஜய்.

Kannan

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தொறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இதன் மூலம் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும்.

ஜூன் 12 தண்ணீர் திறக்கப்படவில்லை

இந்த ஆண்டு கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால், மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நிலத்தடி நீரை கொண்டு ஒரு சில பகுதிகளில் மட்டும் சாகுபடி நடைபெற்று வருகிறது.

மேட்டூர் நீர்மட்டம் 90 அடி

கர்நாடாகவில் பெய்த தொடர் மழையால், உபரி நீர் திறந்து விடப்பட்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டி உள்ளது. இன்று காலை நிலவரப்படி, 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

எனவே, சாகுபடிக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு அனுமதி வழங்கியது.

மேட்டூர் வரும் முதல்வர் விஜய்

தண்ணீரை திறந்து விட முதல்வர் விஜய் மேட்டூர் அணைக்கு நாளை வருகை தருகிறார். எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகியோர் முதல்வர்களாக இருந்த போதும், மேட்டூருக்கு நேரில் வந்து அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடனர்.

நாளை தண்ணீரை திறந்து விடுகிறார்

அதேபோன்று, முதல்​வர் விஜயும் சென்​னை​யில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்​து, அங்​கிருந்து சாலை மார்க்​க​மாக மேட்​டூர் அணைக்கு செல்​கிறார்.

தொடர்ந்​து, அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீரைத் திறந்து வைக்​கிறார். இதையொட்​டி, அணை பகுதியில் நிகழ்ச்சி நடை​பெறும் இடத்​தில் மேடை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

பொதுமக்கள் அதிக அளவில் கூடுவர்

முதல்​வர் வரும் வழிகளில் பொது​மக்​கள் அதி​கள​வில் கூடு​வார்​கள் என்​ப​தால், முக்​கியச் சந்​திப்​பு​கள், மக்​கள் கூடும் இடங்​கள் மற்​றும் மேட்​டூர் நகரப் பகு​தி​களில் இரும்​புத் தடுப்​புக் கம்​பிகள் அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

மாவட்ட நிர்​வாகம் சார்​பில் முதல்​வருக்கு வரவேற்பு அளிக்க ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

பாதுகாப்பு பணியில் 3,000 போலீசார்

முதல்​வர் வரு​கை​யையொட்டி போக்​கு​வரத்து மாற்​றங்​கள், வாகன நிறுத்​து​மிடங்​கள், காவல் கட்​டுப்​பாட்டு மையம் உள்​ளிட்ட பாது​காப்பு ஏற்​பாடு​களை​யும் போலீ​ஸார் மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

ஏடிஜிபி தலை​மை​யில் ஐஜி, டிஐஜி, எஸ்​பிக்​கள் உள்​ளிட்ட 3,000 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படு​கின்​றனர்.

மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் உள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு 2,000 கனஅடி தண்​ணீர் வெளியேற்​றப்பட்டு வருகிறது. அணையின் நீர்​மட்​டம் 90.47 அடி​யாக​வும், நீர்இருப்பு 53.19 டிஎம்சி​யாக​வும் இருக்கிறது.

================