அதிரடி உத்தரவு
முதல்வராக பதவியேற்றுக்கொண்ட விஜய் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
அதில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்
மக்களுக்கு இடையுறு : இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவு
மேலும், பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்துக்குள் மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
விஜய்யின் நடவடிக்கை : தலைவர்கள் வாழ்த்து
விஜய்யின் இந்த நடவடிகைக்குஅரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்
இது குறித்து பேசிய அவர் ,குடிநோய் மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை, அப்பழக்கங்களில் இருந்து மீட்பதற்கான இலவச சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை மாவட்டந்தோறும் உருவாக்கிட வேண்டும் என்றும் ,
மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் 23 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 3500 டாஸ்மாக் பணியாளர்கள் வேலை வாய்ப்பையும், அவர்களது குடும்பங்கள் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.” என்றும் விஜய்யின் இந்த நடவடிக்கைகு வரவேற்பு தெரிவித்துள்ளார்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக் கூடாது; மதுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத் தான் அரசு கைகொள்ள வேண்டும்.
அந்த வகையில் , விஜய்யின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார் . இந்த எண்ணிக்கை படிபடியாக அமல்படுத்த பட வேண்டும் என்று தெரிவிதுள்ளார்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
மது மற்றும் போதையில்லாத தமிழ்நாடு அமைக்கப்பட்டால், அதை விட பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு அளிக்க முடியாது. அந்த இலக்கை நோக்கி முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பயணிக்க வேண்டும்.
அதற்கான அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாமக முழுமையான ஆதரவை வழங்கும். விஜயின் இந்த அதிரடி செயல் வரவேற்கதக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
=============