இந்தியாவில் வெப்ப அலைகள்
Environmental and climate researchers have warned that summer in Tamil Nadu will last until September this year due to the possibility of El Nino conditions developing : இங்கிலாந்தில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியலாளர்கள், இந்தியா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, இந்தியாவின் பருவமழை காலத்தில் வரும் “ஈரப்பதத்துடன் கூடிய வெப்ப அலைகள்” எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னையில் அதிகப்படியான ஈரப்பதம்
சென்னையில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த ஏர் ஷோவில் ஏற்பட்ட மரணம் மற்றும் பொதுமக்கள் மயக்கமடைய காரணம் முழுக்க முழுக்க காற்றில் இருந்த அதிகப்படியான ஈரப்பதம் என இந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
வானிலை மையங்கள் மூலம் பதிவாகக்கூடிய வெப்பத்திற்கும், மனிதர்கள் உணரக்கூடிய வெப்பத்திற்கும் பெரியளவிலான வித்தியாசம் இருப்பதை இந்த ஆய்வு அறிக்கை விளக்கி உள்ளது.
தமிழ்நாடு போன்ற கடலோர மாவட்டங்களில் எப்போதும் ஈரப்பதம் அதிகம் நிலவுகிறது. இதனால் பருவமழையும் ஈரப்பத வெப்ப அலையை அதிகரிக்கின்றன.
இந்த ஆண்டு எல்நினோ
இந்தாண்டு எல்நினோ (வழக்கத்டை விட அதிகமாக வெப்பமடையும் ஒரு இயற்கை வானிலை நிகழ்வு) தன்மை தமிழகத்தில் உருவாக வாய்ப்புகள் உள்ளது.
செப்டம்பர் வரை வெப்பம் நீடிக்கும்
எனவே, இந்த கோடைகாலம் செப்டம்பர் வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, நாம் ஈரப்பத வெப்ப அலையை எதிர்கொள்ள மக்கள் தயாராகி கொள்ள வேண்டும்” என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
===========