CM Breakfast Scheme: TVK government changes the name; henceforth, it will be the "Kamarajar Breakfast Scheme google
தமிழ்நாடு

முதல்வரின் காலை உணவு திட்டம்: பெயரை மாற்றிய தவெக அரசு,” இனி காமராஜர் காலை உணவு” திட்டம் ..

கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயரை மாற்றம் செய்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது

Rohini

முதல்வரின் காலை உணவு திட்டம்

கடந்த திமுக ஆட்சியில் முதல்வரின் காலை உணவு திட்டம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதற்கட்டமாக 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டு ,அடுத்த கட்டமாக 8 ஆம் வகுப்பு வரை திட்டமானது விரிவாக்கம் செய்யப்பட்டது

காலை உணவு திட்டம் , பெயர் மாற்றம் செய்த தவெக அரசு

இந்த நிலையில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசு , முதல்வரின் இந்த காலை உணவு திட்டத்தினை பெயர் மாற்றம் செய்து ”காமராஜர் காலை உணவு திட்டம் ”என்று அறிவித்துள்ளது, இருப்பினும் இந்த திட்டமானது எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது

மிகப்பெரிய பலனாக இருந்து வரும் காலை உணவு திட்டம்

தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட இந்த காலை உணவு திட்டமானது கிராமப்புறங்களில் பல்வேறு பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் , பெயர் மாற்றம் செய்துள்ள தவெக

மகளிர் விடியல் பயணம் , பெயர் மாற்றம் செய்த தவெக

தமிழகத்தின் முதன்முறையாக மகளிருக்கு இலவச பேருந்து சேவையை திமுக அரசு கொண்டுவந்தது, இந்த இலவச திட்டத்தின் மூலமாக தமிழகத்தின் அனைத்து மாநாகரப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற இலவச திட்டத்தை அமல்படுத்தியினர்

இந்த இலவச திட்டம் மூலம் தினந்தோறும் பல்லாயிரக்கணககான பெண்கள் தமிழகம் முழுவதும் இலவசமாக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்

மகளிர் விடியல் பயணம் , விடியல் வார்த்தையை நீக்கம்

திமுக அரசால தொடங்கப்பட்ட மகளிர் விடியல் பயணம் எனற திட்டத்தின் பெயரை , ’மகளிர் பயணம் ’ என்று மாற்றம் செய்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அறிவித்துள்ளது ,

அதன் படி அனைத்து மாநாகர பேருந்துகளிலுல் இனி ’மகளிர் பயணம் ’ என்றே அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது

நான் முதல்வன் திட்டத்தின் பெயரையும் மாற்றம் செய்த தவெக அரசு

இதற்கு முன்னதாக, முந்தைய திமுக அரசு கொண்டு வந்திருந்த 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரையும் 'திறன் தமிழ்நாடு' என சமீபத்தில் மாற்றம் செய்திருந்தது , இதற்கு எதிர்கட்சிகளிடையே கடும் எதிர்ப்பானது கிளம்பியிருந்தது

இந்த நிலையில் தவெக தற்போது திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதல்வர் காலை உணவு திட்டத்தின் பெயரையும் மாற்றம் செய்து காமராஜர் காலை உணவு திட்டம் என்று மாற்றி அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிட்டத்தக்கது

=======================