CM Candidate Vikay TVK Resolution https://x.com/Tvk_ITWING
தமிழ்நாடு

முதல்வர் வேட்பாளர் ”விஜய்” : தவெக செயற்குழுவில் தீர்மானம்

தவெக செயற்குழு கூட்டத்தில் விஜய்யை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Kannan

தவெக செயற்குழு கூட்டம் :

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

மத்தியில் பாஜக, மாநிலத்தில் திமுக ஆட்சியை எதிர்க்கும் விஜய், யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்விக்கு முழுமையான விடை கிடைக்காமல் இருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* தவெக முதல்வர் வேட்பாளராக விஜய்யை தேர்வு செய்து செயற்குழு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

* கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் விஜய்க்கு வழங்கப்பட்டு உள்ளது.

* தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை நடத்த தீர்மானம். திருச்சி அல்லது மதுரையில் 2வது மாநில மாநாட்டை நடத்த முடிவு

* ஜூலை 2வது வாரத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்க முடிவு.

* செப்டம்பர் முதல் டிசம்பவர் வரை விஜய் மக்கள் சந்திக்கிறார்.

* தவெகவிற்கு எதிராக கபட நாடகம் ஆடும் திமுக அரசின் அராஜக போக்கிற்கு கண்டனம்

* கச்சத்தீவை குத்தகைக்கு கேட்டு பெற வேண்டும் என வலியுறுத்தல்

* மாநில சுயாட்சி, சட்டம் ஒழுங்கை காக்க தவறிய தமிழக உள்துறை அமைச்சருக்கு கண்டனம்.

சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வெட்பாளர் விஜய் அறிவிக்கப்பட்டு இருப்பதால், மும்முனைப் போட்டி உறுதியாகி உள்ளது.

======