அவிநாசி உயர் மட்ட மேம்பாலம்
Avinashi Road Flyover Name As GD Naidu : கோவை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான அவிநாசி மேம்பாலம் பணி தற்போது முடிவடைந்துள்ளது.10.1 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலத்திற்கு விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திநகர் மேம்பாலம்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு முடிவுறமால், இருக்கும் நிலையில் தேர்தலும் நெருங்கி கொண்டிருக்கிறது. சென்னை போன்ற மாநரங்கள் மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இன்னும் முடிவுபெறமால், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அவ்வப்போது மேம்பாலங்கள் பணி முடிக்கப்பட்டு சில இடங்களில் மேம்பாலம் திறக்கப்பட்டும் வருகிறது. அதன்படி சில நாட்களுக்கு முன் திநகர் இரும்பு பாலம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
முதலமைச்சர் எக்ஸ் பதிவு :
அதன்படி கோவையில் நிலுவையில் இருந்த அவிநாசி மேம்பாலம் பணி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 2021ம் ஆண்டு மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில், ரூ.1,791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 10.10 கி.மீ நீளமுள்ள இந்த மேம்பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த 'அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்த அவர், கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், ஜிடிநாயுடுவின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க : கோவையின் புதிய அடையாளம் ’அவினாசி மேம்பாலம்’ : 10 கிமீ நீளம்
பாலத்தின் சிறப்பம்சம் :
பாலத்தின் மொத்த நீளம் : 10,100 மீ
மேம்பாலத்தின் திட்ட மதிப்பீடு : ரூ.1,791 கோடி
மொத்த அகலம் : 17.25 மீ
திறப்பு நாள் : 09.10.2025.