Cm Vijay announces a loan waiver for small and marginal farmers who have availed crop loans up to ₹75,000.  google
தமிழ்நாடு

”ரூ 75,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள சிறுகுறு விவசாயிகள், கடன் தள்ளுபடி செய்யப்படும்” : முதல்வர் விஜய் அறிவிப்பு..!

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

Rohini

ரூ 75000 வரை பயிர்கடன் தள்ளுபடி செய்யபடும் : முதல்வர்

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

ஏற்கனவெ தள்ளுபடி செய்யப்பட்ட பயிர் கடன் விவரம்

தவெக தேர்த்ல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த்து , கடந்த மாதம் 25தேதியில் ரூ.50,000 வரை பயிர்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து பயிர் கடன் தள்ளுபடித் திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய விவசாயிகள் கோரிக்கை

ரூ.50,000 வரை பயிர்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்ப்படுத்தியிருந்தது .

இந்த நிலையில் மாநிலம் ம் முழுவதிலுமிருந்து இவ்விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோரிகைகள் வழுத்திருந்தது

பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட தலைமை செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

மறுசீரமைப்பு பயிர்கடன் குறித்து முதலவர் விஜய் தெரிவித்துள்ளதாவது

மறுசீரமைப்பு பயிர்கடன் திட்டம் குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மாநிலம் முழுவதிலுமிருந்து இந்த விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.

முதல்வர் மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்ய உத்திரவிட்டதற்கிணங்க மேற்கண்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட ஜூன் 15-ல் தலைமைச் செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இம்மறு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை -உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் மறு பரிசீலனை செய்யப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாள்களுக்குள் முழுமையாக செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான

14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ. 6,000 கோடி வரை தள்ளுபடி

சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர் கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ. 6,000 கோடி வரை தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75,000-மும் குறைந்தபட்சமாக ரூ.35,000-மும் பணப்பயன் கிடைக்கும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.

மேற்கண்ட கடன் தள்ளுபடி விவரம்

8,33,773 குறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ. 3,599.E கோடி

5,16,183 சிறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ. 1,995.4 கோடி

93,548 இதர பெரு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ. 337.15

ஆக கூடுதல் 14,43,504 விவசாயிகளுக்கு உத்தேச பயிர் கடன் தள்ளுபடித் தொகை ரூ. 5,932.23 கோடி ஆகும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,43,504 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

என்று இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

=================