ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 216 ரன்கள் குவித்ததுடன், பின்னர் இலங்கை அணியை 69 ரன்களுக்கு சுருட்டி 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள குணாளன் கமலினி, மதுரையைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஆவார்.
தமிழக மகளிர் கிரிக்கெட்டில் தனது திறமையால் கவனம் ஈர்த்த அவர், இந்திய அணியிலும் இடம்பிடித்து தொடர்ந்து முன்னேறி வருகிறார்.
மதுரையில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டுக்கு உயர்ந்துள்ள கமலினியின் சாதனை தமிழக இளம் வீராங்கனைகளுக்கு ஊக்கமளிப்பதாக பார்க்கப்படுகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை கமலினிக்கும் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் கமலினியின் சாதனையை பாராட்டும் வகையில் தமிழக அரசின் சார்பில் ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கமலினியின் இந்த சாதனை தமிழக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் என விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சர்வதேச அரங்கில் தமிழகத்தின் பெயரை உயர்த்தியுள்ள கமலினி, எதிர்காலத்தில் இந்திய அணிக்காக மேலும் பல சாதனைகள் படைப்பார் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது
===================