நலத்திட்டங்கள் தொடரும்
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, “எந்த ஆட்சி வந்தாலும் திமுக அரசின் திட்டங்களை ஒதுக்கிவிட முடியாது” என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசி இருந்தார். அதன்படியே, “முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட மக்கள்நலத் திட்டங்கள் தொடரும்” என்று பேரவையின் முதல் கூட்டத்திலேயே முதல்வர் விஜய் அறிவித்தார்.
திமுக அரசின் திட்டங்கள்
அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் தவெக ஆட்சியிலும் வழக்கம்போல் தொடர்கின்றன. இவை அனைத்துமே திமுக அரசின் திட்டங்கள்.
பெண்களில் அதிக அளவில் வாக்களிப்பு
இந்த திட்டங்களால் பயன்பெற்ற மகளிர், மாணவ, மாணவிகளும் கூட இம்முறை தவெக-வுக்கு வாக்களித்தார்கள். இவர்களின் அபிமானத்தைத் தக்கவைக்கவே இந்தத் திட்டங்களை தொடர அனுமதித்திருக்கிறார் முதல்வர் விஜய்.
திமுக அரசியல் முறியடிப்பு
ஒருவேளை, இதில் ஏதாவது ஒன்றை நிறுத்தி இருந்தால்கூட திமுக அதை வைத்து அரசியல் செய்திருக்கும். அதற்கு வாய்ப்பில்லாமல் செய்து விட்டார் விஜய்.
அதேசமயம், இத்தனை நாளும் அதிமுக-வுக்கு வாக்களித்து வந்த மக்களும் இம்முறை விஜய் பக்கம் திரும்பி இருக்கிறார்கள்.
தானாக ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள்
ஆட்சியமைக்க இவர்களின் ஆதரவைக் கோர வேண்டாம் என விஜய் ஒதுக்கிவைத்த நிலையிலும், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 25 அதிமுக எம்எல்ஏக்கள் தனியாக வந்து தவெக அரசுக்கு ஆதரவளித்திருக்கிறார்கள்.
தரம் உயரும் அம்மா உணவகங்கள்
இவர்களையும், தேர்தலில் தனக்கு வாக்களித்த அதிமுக அபிமானிகளையும் மகிழ்விக்கும் விதமாகவே அம்மா உணவகங்களை விஜய் கையில் எடுத்ததாக தெரிகிறது. .
ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம்
2013ல் தமிழகத்தில் அம்மா உணவகங்களுக்கு ஜெயலலிதா கொண்டு வந்தார். அவருக்கு பின்னால் தொடர்ந்த அதிமுக அரசு இந்தத் திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பெரிய அளவில் மெனக்கெடவில்லை.
தமிழகத்தை பின்பற்றும் மாநிலங்கள்
ஜெயலலிதாவின் அம்மா உணவகங்களுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து, உத்தராகண்டில் ‘இந்திரா அம்மா போஜனாலயா’, டெல்லியில் ‘அடல் உணவகங்கள்’...
மேற்கு வங்கத்தில் ‘மா உணவகங்கள்’, ஆந்திரத்தில் ‘அண்ணா கேன்டீன்’, கர்நாடகத்தில் ‘இந்திரா கேன்டீன்’, மத்தியப் பிரதேசத்தில், ‘தீன் தயாள் அந்தியோதயா ரசோய் யோஜனா’ என போட்டிபோட்டு அரசு மலிவு விலை உணவகங்களை கொண்டு வந்தன.
ரூ.5க்கு மீன் சாப்பாடு
மேற்கு வங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு, மலிவு விலை உணவகத்தில் 5 ரூபாய்க்கு மீன் சாப்பாடே தருவதாக அறிவித்திருக்கிறது.
நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் நாங்கள் தான் முன்னோடி என்று திமுகவும், அதிமுகவும் சொல்லுவது வழக்கம்.
முதல்வர் விஜயின் நுட்பமான அரசியல்
இருகட்சிகளின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் இருகட்சி அனுதாபிகளையும் தன்பக்கம் ஈர்க்கும் அரசியல் நுட்பத்தை செயல்படுத்தி இருக்கிறார் முதல்வர் விஜய்.
===============