தமிழகத்தில் பருவமழை காலம்
தமிழகத்தில் ஆண்டு தோறும் இரண்டு பருவங்கள்ல்ல, தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை மூலமா தண்ணீர் கிடைக்குது. நீர் நிலைகள், அணைகள் நிரம்புறதால, விவசாயம் செய்ய முடியுது. தமிழகத்தில் உயிர்நாடி வேளாண் தொழில்தான். எனவே, தண்ணீர் மிக முக்கியமான ஒண்ணா இருக்கு.
பெருநகரங்களில் மக்கள்தொகை
வியாபாரம், வேலை வாய்ப்புக்காக பெருநகரங்களில் மக்கள்தொகை அதிகமா இருக்கிறதால, இங்கு தண்ணீர் தேவை என்பது அதிகம் தான். பருவமழை பொய்க்காமல், பெய்து விட்டால் பிரச்சினை இல்லை. போக்கு காட்டினால், தண்ணீரை விலை கொடுத்துதான் வாங்க வேண்டி இருக்கு.
நிலத்தடி நீர் சேகரிப்பு
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அப்படின்னு பார்த்தா, நீர்நிலைகளை பாதுகாக்கிறது, தூர்வாரி கூடுதல் நீரை சேகரிக்கிறது, மழை காலங்களில் கிடைக்கும் நீர் வீணாக கடலுக்கு சென்று கலக்காமல் இருக்க, தண்ணீர் சேகரிப்பு திட்டங்களை சிறப்பா செயல்படுத்துறது தான்.
2001ல் கட்டாயமாக்கிய ஜெயலலிதா
இதை முன்னிறுத்தி தான் 2001ம் ஆண்டு தமிழக முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், நீர் பற்றாக்குறையை போக்கவும் கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டதை கொண்டு வந்தாங்க.
மழைநீர் சேகரிப்பு கட்டாயம்
அதன்படி, அனைத்து புதிய மற்றும் பழைய கட்டிடங்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயம் இருக்க வேண்டும் அப்படின்னு உத்தரவு போடப்பட்டுச்சு.
நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
இப்படி செய்யுறதால, நிலத்தடி நீரை மீட்டெடுக்கவும், கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியும். மழைக்காலங்களில் மொட்டை மாடிகள், வீட்டின் கூரைகளில் விழும் மழைநீரை சேகரித்து, வடிகட்டி, நிலத்தடியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் அல்லது குழிகள் மூலம் நீரை சேமிக்க முடியும்.
சட்டமா கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டதால, சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததோடு, நீரின் தரம் அதாவது உப்புத்தன்மையும் குறைந்தது, போதிய நீரானது மக்களுக்கு கிடைக்க வழி காணப்பட்டது.
கிடப்பில் போட்ட திமுக
ஆனா, பிறகு ஆட்சி வந்த திமுக, இந்த திட்டத்தை தொடர்ந்து கட்டாயமாக்கி செயல்படுத்தவில்லை. இதனால, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை மக்களும் பராமரிக்க விட்டதால, அருமையான ஒரு திட்டம் முடங்கி போனது.
தவெக அரசின் நீர் சேகரிப்பு இயக்கம்
இந்தநிலையில், தவெக அரசும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை கையில் எடுத்து இருக்கு. சூப்பர் எல் நினோ காரணமா இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு கிடைக்கல. நீர் நிலைகள் வறண்டு இருக்கின்றன. விவசாயமும் பொய்த்து போய் கிடக்கு.
‘துளி’ இலச்சினை வெளியீடு
எனவே, மழை நீரை சேகரிக்கிற விதமா, நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில நடந்துச்சு. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் விஜய், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுக்கான ‘துளி’ இலச்சினையை வெளியிட்டாரு.
அதிகரித்து வரும் நீர்த் தேவை, நகரமயமாக்கல், மாறி வரும் மழைப்பொழிவு, காலநிலை மாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நிலத்தடி நீர்வளங்களைப் பாதுகாக்க இந்த இயக்கத்தை தமிழக அரசு முன்னெடுத்து இருக்கு.
அனைத்து கட்டிடங்களிலும் கட்டமைப்புகள்
அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், பொதுக் கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிகக் கட்டிடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு சீரமைக்கப்படும்.
வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு
புதிய கட்டிடங்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே உள்ள வீடுகள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த ஊக்குவிக்கப்படும்.
மழைநீர் சேகரிப்பு குறித்து உள்ளாட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சுய உதவிக் குழுவினர், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், தன்னார்வலர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படும்.
இந்த பணிகளோட முன்னேற்றம், சிறப்பான செயல்பாடுகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படும்.
குறிப்பா, மழைநீர் செறிவூட்டும் அகழிகள், நீர் ஊடுருவும் குழிகள், செறிவூட்டும் கிணறுகள் போன்ற அமைப்புகள் நிலத்தின் தன்மைக்கேற்ப உருவாக்கப்படும்.
மழைநீர் சேமிப்புப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், சமூக அமைப்புகளுக்கு விருதுகளும் வழங்கப்படும்.
’துளி’ இயக்கம் ஒருங்கிணைப்பு
இருக்கிற வளங்களை சிறப்பாக பயன்படுத்தவும், நடைமுறையில் உள்ள நீர்வளத் திட்டங்களோடு ’துளி’ இயக்கம் ஒருங்கிணைக்கப்படும்.
தமிழக அரசு அறிவுறுத்தல்
பொதுமக்கள் மற்றும் நிறுவனத்தினர் தங்கள் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைச் சீரமைச்சு, சிறப்பான திட்டத்தை முன்னெடுத்து செல்லணும் அப்படின்னு தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருக்கு.
பொதுமக்களும், நிறுவனங்களும் சமூக நல நோக்கத்தோட மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பொறுப்பா, நிறைவேத்தி, தொடர்ந்து செயல்படுத்தினா, தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெற்ற மாநிலமா தமிழ்நாடு என்ற இலக்கை விரைவில் அடையலாம். தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலையும் மாறலாம்.
====================