Chief Minister Vijay has ordered the implementation of new housing projects in Chennai, comprising 6,157 apartment units at a cost of Rs 1,401 crore.
ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள்
சென்னையில் சொந்த வீடு இல்லாத ஏழை, எளிய குடும்பங்கள் மற்றும் பழைய அல்லது பாதுகாப்பற்ற கட்டடங்களில் வசிப்போருக்குப் பாதுகாப்பான நிரந்தர வசிப்பிடங்களை வழங்க அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகள்
இதற்காக அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தவெக அரசு சென்னையின் 9 இடங்களில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட உத்தரவு இட்டிருக்கிறது.
முதல்வர் விஜய் அரசு உத்தரவு
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,
அனாதைக்குப்பம் பகுதியில் 64 வீடுகள், வியாசர்பாடி பழைய பிளாக் - 1158, பட்டினப்பாக்கம் - 1484 குடியிருப்புகளும் கட்டப்படவுள்ளன.
மேலும், ருக்மணி நகர் - 111, முல்லைநகர் - 462, உதயசூரியன் நகர் - 850, பச்சைக்கல் வீராசாமி தெரு - 912, மேற்கு கல்லறை சாலை - 792, கக்கன் காலனி -324 புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட மதிப்பு செலவு, ரூ.1,401.75 கோடியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான குடும்பங்களுக்கு வீடுகள்
இவை அனைத்தும் அடுக்குமாடி வடிவத்தில் கட்டப்படும் என்பதால், நிலப்பயன்பாடு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு அதிகமான குடும்பங்களுக்கு வீடு கிடைக்கும்.
நடுத்தர குடும்பங்களுக்கு வரப்பிரசாதம்
இந்தத் திட்டம் சென்னையின் நகர்ப்புற வளர்ச்சிக்கும், ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் உதவும்.
பழைய குடியிருப்புப் பகுதிகளில் மறுகட்டுமானம் மற்றும் புதிய கட்டுமானம் ஆகிய இரண்டும் இணைந்து நடைபெறும் வகையில் இந்தப் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நவீன வசதிகளுடன் குடியிருப்புகள்
இதனால் ஏற்கனவே உள்ள சுற்றுச்சூழல் மற்றும் அடிப்படை வசதிகளுடன் புதிய குடியிருப்புகள் இணைக்கப்படும். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நவீன வசதிகள் இடம்பெறும்.
தண்ணீர் விநியோகம், கழிவுநீர் அகற்றும் அமைப்பு, மின்சாரம், லிஃப்ட் வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
====