cm vijay about 'Gem' Veeramani case  source:google,thamizhalai
தமிழ்நாடு

ஜெம் வீரமணி வழக்கு குறித்து பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் ஆவேசப் பேச்சு!

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஜெம் வீரமணி வழக்கு குறித்துப் பேசிய முதல்வர் விஜய், கடந்த திமுக ஆட்சியில் வழக்கு மூடி மறைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.

Kavitha prasanna

Speaking about the 'Gem' Veeramani case during the Maduranthakam by-election campaign, Chief Minister Vijay alleged that the case had been suppressed during the previous DMK regime.

மதுராந்தகம் பிரச்சாரத்தில் பேச்சு

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டை உலுக்கியுள்ள ஜெம் வீரமணி வழக்கு குறித்து மிகவும் ஆவேசமாகப் பேசினார்.

குழந்தைகள் மீதான கொடூரம்

தமிழ்நாட்டில் தற்போது ஒரு முக்கிய வழக்கு நடந்துகொண்டிருக்கிறது என ஜெம் வீரமணி வழக்கை குறிப்பிட்ட முதல்வர் விஜய், இங்கு பச்சை குழந்தைகளை ஒருவன் பல வருடங்களாகச் சீரழித்துக்கொண்டிருந்ததாகத் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் மூடி மறைப்பு

சிறுமிகளைச் சீரழித்த இந்த வழக்கு, கடந்த திமுக ஆட்சியில் மூடி மறைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், தங்கள் ஆட்சியில் பெண்களைச் சீரழித்தவர்களைத் தூக்கி உள்ளே வைத்துள்ளதாகக் கூறினார்.

எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்

பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் பற்றி வெளியே பேச முடிவில்லை என்றால் இத்தனை வருடம் என்ன அரசியல் செய்துகொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய அவர், இதில் கூடவா கூட்டு சேர்ந்து வாய் திறக்காமல் இருப்பீர்கள் .வாயைத்திறங்கள் ஸ்டாலின் சார்..இதற்குக் கூடவா வாயத்திறக்க மாட்டீர்கள் என்று சாடினார்.

இடைத்தேர்தலில் பாடம் புகட்ட கோரிக்கை

இந்த வழக்கின் தீவிரத்தையும் மீறி மு.க.ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய முதல்வர் விஜய், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அந்த இருவருக்கும் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க : U.S-ற்கு அழுத்தம் தர கனடா முடிவு :100 ஆண்டுகளில் முதன்முறை! அமெரிக்காவையே எதிரியாக கருதி போர் பயிற்சி நடத்தும் கனடா?

==========