CM Vijay Starts Two-Day Multi-Constituency Campaign from Madurantakam Google
தமிழ்நாடு

தவெக வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை : மதுராந்தகத்தில் இன்று விஜய் பொதுக்கூட்டம்...

சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் மேற்கொள்கிறார் ...

NARENDRAN K

மதுராந்தகத்தில் இன்று முதல்வர் விஜய் பிரசாரம் :

மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு, தவெக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் முதல்வர் விஜய் இன்று மதுராந்தகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அவரது பிரசார கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலை மார்க்கமாக பயணம் :

சென்னையில் இருந்து புறப்படும் முதல்வர் விஜய், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பூஞ்சேரி, திருக்கழுகுன்றம், ஈசூர்-பூதூர், மதுராந்தகம் வழியாக அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி பகுதியை அடைந்து, அங்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

5,000 பேருக்கு மட்டுமே அனுமதி :

காவல்துறை அனுமதி மற்றும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

க்யூஆர் (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 5,000 பேருக்கு மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலருக்கு அனுமதி இல்லை :

நிகழ்ச்சியில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கர்ப்பிணிகள், சிறுவர்கள், சிறுமிகள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்கள் பங்கேற்க வேண்டாம் என தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

இடைத்தேர்தல் களத்தில் தீவிரம் :

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில் முதல்வர் விஜயின் பிரசாரம் தேர்தல் களத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு நாட்களில் நான்கு தொகுதிகளில் பிரசாரம் :

இடைத்தேர்தலை முன்னிட்டு இரண்டு நாட்களில் தலா இரண்டு தொகுதிகள் என மொத்தம் நான்கு தொகுதிகளில் முதல்வர் விஜய் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வரும் நாட்களில் தேர்தல் பிரசாரம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

====================