CM Vijay stated at a meeting of allied party leaders said, unite to thwart DMK's conspiracy to topple TVK govt google
தமிழ்நாடு

”திமுக சதியை முறியடிப்போம்” : இடைத்தேர்தலில் 100% வெற்றி, கூட்டணியை வலுப்படுத்துவோம் : முதல்வர் விஜய் சூளுரை...!

தவெக அரசை கவிழ்க்கும் திமுகவின் சதியை ஒன்று சேர்ந்து முறியடிப்போம் என்று, தோழமை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் விஜய் தெரிவித்து இருக்கிறார்.

Kannan

தமிழக வெற்றிக் கழகம்

கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்தித்த தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு காங்கிரஸ் முதல் ஆளாக ஆதரவுக்கரம் நீட்டியது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி

அதைத்தொடர்ந்து, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், ஐயுஎம்எல் கட்சிகளும் தவெகவிற்கு ஆதரவு தர முதல்வரானார் விஜய். தவெக ஆட்சி அமைந்து, தமிழகத்தில் முதன்முறையாக கூட்டணி அரசு பொறுப்பேற்றது.

தோழமை கட்சிகள் கூட்டம்

அதன்பிறகு, மதிமுகவும் கூட்டணியில் இணைந்து இருக்கிறது. இந்தநிலையில், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல் கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர், விசிக தலை​வர் திரு​மாவளவன், மதிமுக பொதுச் செய​லா​ளர் வைகோ, ஐயுஎம்​எல் தலை​வர் காதர் மொய்​தீன் பங்​கேற்​றனர். மேலும், நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் ப.சிதம்​பரம், பிர​வீன் காந்​தி...

ஜோதி​மணி, ராபர்ட் ப்ரூஸ், துரை வைகோ, நவாஸ் கனி, அமைச்​சர்​கள் விஸ்​வ​நாதன், ராஜேஷ்கு​மார், வன்​னியரசு, ஷாஜ​கான், ஐயுஎம்​எல் பொதுச் செய​லா​ளர் முகமது அபுபக்​கர், விசிக துணை பொதுச் செய​லா​ளர் சிந்​தனை செல்​வன் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​டனர்.

இடதுசாரிகள் பங்கேற்கவில்லை

இந்தக் கூட்​டத்​தில் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் பங்​கேற்​க​வில்​லை. ஆனால், தவெக அரசுக்கு அளிக்கும் ஆதரவு தொடரும் என்றும், திமுக கூறுவது போல ஆட்சி கவிழாது எனவும், 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று உறுதிபடத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கூட்டணி அமைக்க தலைவர்கள் வலியுறுத்தல்

தவெக ஆதரவு கட்​சிகளை ஒரு முறை​யான கூட்​ட​ணி​யாக உரு​வாக்க வேண்​டும். இந்த கூட்​ட​ணிக்கு ஒரு பெயரைச் சூட்​டி, அதற்​கென ஒரு ஒருங்கிணைப்பு குழுவை நியமிக்க வேண்​டும் எனத் தலை​வர்​கள் வலி​யுறுத்தி பேசினர்.

வரவிருக்​கும் உள்​ளாட்​சி தேர்​தல் மற்​றும் இடைத்​தேர்​தல்​களில் இந்த கூட்​டணி இணைந்து செயல்​பட்டு வெற்​றியை உறுதி செய்​வது குறித்து விவா​திக்​கப்​பட்​டது.

முதல்வர் விஜய் ஆலோசனை

தொடர்ந்து முதல்​வர் விஜய், கூட்​ட​ணிக்​காக தான் வைத்​திருக்​கும் பெயர் குறித்து தலை​வர்​களிடம் ஆலோ​சித்​தார். மேலும், தவெக தலை​மையி​லான அரசு மதச்​சார்​பின்மை கொள்​கை​யில் என்​றும் உறு​தி​யாக இருக்​கும் என்றார்.

ஊழலற்ற ஆட்சி உறுதி

லஞ்​சம் மற்​றும் ஊழலற்ற வெளிப்​படை​யான ஆட்​சி​யைத் தொடர்ந்து வழங்​கு​வ​தில் எவ்​வித சமரச​மும் செய்து கொள்​ளப்​ப​டாது என விஜய் உறுதி அளித்​தார்.

திமுகவின் சதியை முறியடிப்போம்

தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக சதி செய்து வருகிறது. ஆறு மாதங்களுக்குள் தேர்தல் வரும் என்று ஸ்டாலின் பேசி வருகிறார். இந்த சதியை அனைவரும் சேர்ந்து முறியடிப்போம்.

திமுகவின் சதியை தடுக்க வேண்டும் என்றால், கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். திமுகவை பலவீனப்படுத்தவும் வேண்டும்.

இடைத்தேர்தல் 100% வெற்றி அவசியம்

விரைவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. இதில் 100 சதவீதம் வெற்றி என்பது அவசியமான ஒன்று. அப்போது தான், எதையும் சாதிக்கலாம்.

ஆட்சி நீடிக்கும்

ஆட்சி கவிழும் என்று சிலர் பேசுகின்றனர். அதற்கு வாய்ப்பே இல்லை. தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். தொடர்ந்து தமிழகத்திலு தவெக ஆட்சி என்பது இருக்கும்.

வேறு கட்சிகள் கூட்டணிக்கு வரும்

இதற்கு கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அப்போது தான், நாம் தொடர் வெற்றிகளை குவிக்க முடியும். மேலும் சில கட்சிகளும் தவெக கூட்டணிக்கு வர இருக்கின்றன” இவ்வாறு தோழமை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் விஜய் பேசினார்.

================